‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ – நடிகர் வடிவேலுவின் புதிய திரைப்படம்

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ – நடிகர் வடிவேலுவின் புதிய திரைப்படம்

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர் ‘நாய் சேகர்’. இந்தப் பெயரில் புதிய படத்தை எடுக்க சுராஜ் திட்டமிட்டமிட்டிருந்தார்.

ஆனால் காமெடி நடிகர் சதீஷை நாயகனாக வைத்து இதே ‘நாய் சேகர்’ என்ற தலைப்பில் புதிய இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருவதால் அந்தத் தலைப்பு வடிவேலு படத்திற்குக் கிடைக்கவில்லை.

இதனால் இந்தப் படத்திற்குப் புதிய தலைப்பு வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் வடிவேலு. அந்தப் புதிய தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று மாலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score