full screen background image

கள்ளக் காதல், கருக்கலைப்பு என்பதெல்லாம் அபாண்டம் – நடிகை சமந்தாவின் மறுப்பு

கள்ளக் காதல், கருக்கலைப்பு என்பதெல்லாம் அபாண்டம் – நடிகை சமந்தாவின் மறுப்பு

காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகளான நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக தெலுங்கு திரையுலகப் பத்திரிகைகள் பல விஷயங்களை தொடர்ந்து எழுதி வந்தன.

சமந்தா திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது, படங்களில் சமந்தா காட்டிய அதீத கவர்ச்சி, குழந்தை பெற்றுக் கொள்ளாதது, சமந்தாவிற்கும் அவரது உடை வடிவமைப்பாளருக்கும் இடையிலான உறவு.. குடும்பப் பாரம்பரியத்தைக் கண்டு கொள்ளாதது.. மாமனார் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக அபார்ஷன் செய்தது..  என்று பலவிதமாக அவரது விவகாரத்திற்கு காரணங்கள் முன் வைக்கப்பட்டன.

இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா இன்றைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “என் சொந்தப் பிரச்சினையில் நீங்கள் காட்டிய உணர்வுகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என் மீது வைக்கப்பட்ட பொய்யான வதந்தி மற்றும் கதைகளுக்கு எதிராக நீங்கள் காட்டிய அனுதாபத்திற்கு நன்றி.

முதலில் வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள். பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை. நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றார்கள். தற்போது நான் கருக்கலைப்பு செய்ததாக கூறுகின்றனர்.

விவாகரத்து என்பது பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்தக் கடினமான நேரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகிறது. சத்தியமாக சொல்கிறேன்… இவையெல்லாம் எந்த வகையிலும் என்னை உடைக்காது…” என கூறியுள்ளார்.

Our Score