தமிழின் முதல் ‘மியூஸிக்கல் படம்’ இதுதானாம்..!

தமிழின் முதல் ‘மியூஸிக்கல் படம்’ இதுதானாம்..!

இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். பாடல் போட்டியாகட்டும்.. நடனப் போட்டியாகட்டும்.. அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி  பெரும் என்பது வரலாறு.

இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வே வருகிறது ‘வானவில் வாழ்க்கை’. ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘பருவ ராகம்’ என இளைஞர்களை கவர்ந்த இனிய இசை மயமான படங்களுக்கு அன்று முதல் இன்றுவரை வரவேற்பு உத்திரவாதம்.

‘வானவில் வாழ்க்கை’ அத்தகைய ஒரு படம்தான். மொத்தம் 17 பாடல்கள் இடம் பெற்றிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்து இயக்குனராக  அறிமுகமாகிறார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் படத்தில் நடித்தவர்களே பாடுகிறார்கள்.

“இரண்டு கல்லூரிகளின் இசைக் குழுக்களிடையே நடக்கும் போட்டிதான் படத்தின் கதை. இசைக் குழுக்களில் இருக்கும் நபர்களே படத்தின் பிரதான 11 கதாபாத்திரங்கள். இவர்களே பாடல்களையும் பாடி நடித்திருக்கிறார்கள், ஆங்கிலத்தில் இவ்வகை படங்களை ‘மியுசிக்கல் ஃபிலிம்’ என்பார்கள். கல்லூரி காலத்திலிருந்தே பாடல்கள் நிறைந்த ஒரு மியுசிக்கல் படத்தை இயக்குவதை பெரும் லட்சியமாகக் கொண்டிருந்தேன்.. கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

நடிப்பு, பாடல், இசைக் கருவி வாசித்தல் என பன்முகம் கொண்ட இளமை ததும்பும் 11 கலைஞர்களை 2 ஆண்டுகள் தேடி பிடித்து இதில் நடிக்க வைத்துள்ளோம். சிறிய, குறுகிய, பெரிய என்கிற வகையில் கதைக்கேற்றவாறு 17 பாடல்களை இதில் வைத்துள்ளேன். இந்தப் படத்தில் நான் அறிமுகம் நடிகர், நடிகைகள் நிச்சயம் பெரிய அளவில் வளர்ந்து ஜொலிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்தப் படம் அடுத்தாண்டு பிப்ரவரி 13-ம் தேதி காதலர் தின கொண்டாட்டமாக வெளிவரும்..“ என்றார் ஜேம்ஸ் வசந்தன்.

Our Score