full screen background image

மணிரத்னம் கதை, வசனத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘வானம் கொட்டட்டும்’.!

மணிரத்னம் கதை, வசனத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘வானம் கொட்டட்டும்’.!

‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில் சே’, ‘அலைபாயுதே’, ‘ராவணன்’, ‘காற்று வெளியிடை’ மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான ‘செக்க சிவந்த வானம்’ போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் இயக்குநர் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’.

இந்த நிறுவனத்தின் 19-வது படைப்பாக ‘வானம் கொட்டட்டும்’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக இந்தப் படத்தின் மூலமாகத்தான் மணிரத்னம் எழுதும் கதையில் நடிக்கப் போகிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கதை, வசனத்தை இயக்குநர்கள் மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். மணிரத்னத்தின் உதவியாளரான இயக்குநர் தனா ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்திற்காக அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இசை – கோவிந்த் வசந்த், ஒளிப்பதிவு – பிரீத்தா, கலை இயக்கம் – அமரன்,  உடை வடிவமைப்பு – ஏகா லகானி.

வரும் ஜுலை மாதம் இந்த ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 

Our Score