இந்தக் கொடுமையை கேக்க ஆளே இல்லையா..?

இந்தக் கொடுமையை கேக்க ஆளே இல்லையா..?

யங் சூப்பர்ஸ்டார் சிம்பு ‘வாலு’ என்ற படத்தில் நடித்தாலும் நடிக்கிறார்.. அது வாலு போல வளர்ந்து கொண்டேதான் செல்கிறதே, தவிர வளர்ச்சியின் எல்லையைத் தொட்டபாடில்லை.

இந்த நேரத்தில் அந்தப் படம் பற்றிய ஒரு வில்லங்கமான விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜீத் ஆகிய மூவரின் புகழ் பெற்ற பாடல்களை ரீமிக்ஸ் செய்து அதில் அவர்களின் புகழ் பாடுவதை போல ஒரு ரீமிக்ஸ் குத்து பாடலை தயார் செய்திருக்கிறாராம் சிம்பு..

எம்.ஜி.ஆரின் படங்களில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யும், ‘அன்பே வா’வும் தெரிகிறது. ரஜினி படங்களில் ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘முத்து’, அஜீத் படங்களில் ‘மங்காத்தா’, ‘பில்லா-2’, ‘வீரம்’ ஆகிய படங்களின் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் ஒன்று சேர்த்து ஒரு கோர்வையான பாடல் காட்சியாக உருவாக்கியிருக்கிறார்கள்.

படம் என்ன கதையோ இருந்துவிட்டுப் போகட்டும்.. ஆனால் பழைய படங்களின் காட்சிகளை பெருமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் புகழ் பெற்ற பாடல்களையும், அதில் நடித்த நடிகர்களையும் இப்படியா கொத்து புரோட்டா போடணும்..? படத்தில் இடம் பெறும் பாடல் காட்சி இப்படித்தான் இருக்கப் போகிறதாம்..!

அந்தக் கொடுமையை நீங்களே பாருங்கள்..

Our Score