வெற்றி மாறன் – சூர்யா – கலைப்புலி S தாணு –  கூட்டணியில் உருவாகும் ‘வாடி வாசல்’..!

வெற்றி மாறன் – சூர்யா – கலைப்புலி S தாணு –  கூட்டணியில் உருவாகும் ‘வாடி வாசல்’..!

‘அசுரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் திரைப்படம் ‘வாடி வாசல்’.

தமிழின் மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடி வாசல்’ என்னும் கதையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை தமிழ்ச் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவும், வெற்றிமாறனும் தாணுவுடன் இணைவது இதுதான் முதல் முறையாகும்.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாடி வாசல்’ படத்தின் முதல் பார்வையை தயாரிப்பாளர் தாணு இன்று வெளியிட்ட கையோடு, நடிகர் சூர்யாவுக்கும்  பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி. இயக்கம் – வெற்றி மாறன்.