full screen background image

2014-ம் ஆண்டிற்கான வி-4 எண்ட்டெர்டெயின்மெண்ட் விருதுகளை பெற்றவர்களின் பட்டியல்..!

2014-ம் ஆண்டிற்கான வி-4 எண்ட்டெர்டெயின்மெண்ட் விருதுகளை பெற்றவர்களின் பட்டியல்..!

எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி சார்பில் பிரபல திரையுலக மக்கள் தொடர்பாளர்களான திரு.டைமண்ட் பாபு, திரு.சிங்காரவேலு, திரு.மௌனம் ரவி, திரு.ரியாஸ் அஹமது நால்வரும் இணைந்து வருடம் தோறும் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கி கொண்டிருகிறார்கள்.

2014-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (01.01.2015) மாலை 6.30 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

மூத்த மக்கள் தொடர்பாளர் ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன், ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன், மூத்த சண்டை பயிற்சியாளர் ‘ஜூடோ’ ரத்னம், மித்ரா தாஸ், கலை இயக்குநர் தோட்டாதரணி, கதை-வசனகர்த்தா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம், ரங்கம்மாள், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி விருதுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சத்யராஜ், பிரபு, சந்திரசேகர், பாண்டியராஜன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.எ.சந்திரசேகர், கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், டி.ஜி.தியாகராஜன், ‘பட்டியல்’ சேகர், கே.ராஜன், அமுதா துரைராஜ், ருக்மாங்கதன், காட்ரகட்ட பிரசாத், கவிஞர் பிறைசூடன், நடிகைகள் நளினி, சுஹாசினி மணிரத்னம், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், குட்டி பத்மினி மற்றும் பல பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சிறந்த நடிகர்கள் – ஆரி (நெடுஞ்சாலை), விமல் (மஞ்சப்பை), சிபிராஜ் (நாய்கள் ஜாக்கிரதை), நகுல் (வல்லினம்), பாலாஜி (நாய்கள் ஜாக்கிரதை), யோகி தேவராஜ் (கயல்), பிளாரன்ட் பெரைரா (கயல்), அபினய் (ராமானுஜன்), சதீஷ் (மான் கராத்தே)

சிறந்த நடிகை – தன்ஷிகா

சிறந்த குணச்சித்திர நடிகை – சஞ்சனா சிங் 

சிறந்த புதுமுக நடிகர்கள் – சந்தோஷ் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்) சந்திரன்(கயல்), கஜேஷ்(கல்கண்டு), வீரா(மொசக்குட்டி)

சிறந்த புதுமுக நடிகைகள் – ஷிவதா (நெடுஞ்சாலை), நந்திதா

சிறந்த நகைச்சுவை நடிகர் – நடிகர்கள் விவேக், சூரி

சிறந்த குழந்தை நட்சத்திரம் – சத்யதேவ் (புலிப்பார்வை)

சிறந்த கதை – பொன்குமரன் (லிங்கா)

சிறந்த திரைக்கதை – கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த வசனம் – பாலாஜிமோகன் (வாயை மூடி பேசவும்)

சிறந்த ஒளிப்பதிவாளர் – கே.எஸ்.செல்வராஜ்

சிறந்த படத்தொகுப்பாளர் – விஜயகுமார் (அப்புச்சி கிராமம்)

சிறந்த படத்தொகுப்பாளர் – தேவா (மஞ்சப்பை)

சிறந்த இசையமைப்பாளர்கள் – இமான், அனிருத்

சிறந்த நடன இயக்குநர் – காயத்ரி ரகுராம்

சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் – ஸ்டண்ட் சிவா

சிறந்த இயக்குநர் விருது – 

1. வினோத் (சதுரங்க வேட்டை)

2. பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)

3. எழில் (வெள்ளக்கார துரை)

4. ராஜபாண்டி (என்னமோ நடக்குது)

5. முத்துராமலிங்கன் (சினேகாவின் காதலர்கள்)

6. விஜய் மில்டன் (கோலி சோடா)

7. ஞானராஜசேகரன் (ராமானுஜன்)

8. டீகே ( யாமிருக்க பயமே)

9. கார்த்திக் கிரிஷ் (கப்பல்)

10. மகிழ்திருமேனி (மீகாமன்)

11. பிரவீன்காந்த் (புலிப் பார்வை)

12. சுசீந்திரன்( ஜீவா)

13. வேல்ராஜ் (வேலை இல்லா பட்டதாரி)

14. கிருஷ்ணா(நெடுஞ்சாலை)

15. இளையதேவன் (ஞான கிறுக்கன்)

16. பிரபுசாலமன் (கயல்)

17. ஆனந்த்சங்கர் (அரிமா நம்பி)

18. கெளரவ் (சிகரம் தொடு)

சிறந்த தயாரிப்பாளர் – மனோபாலா (சதுரங்கவேட்டை)

சிறந்த டிசைனர் – மேக்ஸ்

சிறந்த புகைப்பட கலைஞர் விருது – சுரேஷ் (Top 10 cinema)

சிறந்த பிரிவியு தியேட்டர் – 4 பிரேம்ஸ்

சிறந்த பி.ஆர்.ஓ. – கண்ணதாசன், பாரிவள்ளல், ஈ.வெ.ரா.மோகன்

சிறந்த போட்டோ லேப் – போட்டோ சைன்ஸ்

விழாவில் லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Our Score