உத்தமவில்லன் மறுஜென்மக் கதையா..?

உத்தமவில்லன் மறுஜென்மக் கதையா..?

“இதுதான் உத்தம வில்லனாமே..? தெய்யம் கலைஞரா வர்றாராமே..? 3 ஹீரோயினோமே..? பார்வதி மேனன் சின்னப் பொண்ணுய்யா.. அது கூட எப்படி கமல் நடிக்க முடியும்..? கே.பி. நடிக்கிறாராம்.. தாடி வளர்க்கிறாராம்.. ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் விஸ்வரூபத்திற்குப் பின்பும் கமலை விடலையாமே..?”  – இப்படி எண்ணற்ற கிசுகிசுக்கள் ‘உத்தம வில்லன்’ படத்தைப் பத்தி..!

அமைதியாக இருக்கும்வரையிலும் கொளுத்திதான் போடுவார்கள் என்பதை உணராதவரா கமல்..? “தெய்யம் கலையைப் பற்றியே இப்போது இந்த போஸ்டரை நான் பயன்படுத்திய பின்புதான் தமிழ்நாட்டுக்கே தெரியுது. இதுக்கு முன்னாடி யாருக்காச்சும் தெரியுமா..?” என்று தனிமையில் கோபிக்கிறார் இந்தக் கலைஞர்..

பத்திரிகைகள் எண்ணிக்கை அதிகரிக்க. அதிகரிக்க.. போட்டிகளும் ஏணியில் எ்ட்டாத அளவுக்கு உயர்வதால் இது போன்ற பேச்சுக்கள்.. கிசுகிசுக்களும் கூடும் என்பதை அவர் அறியாததல்ல.. தன்னால் முடிந்த அளவுக்கு சொல்லி இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர இன்றைக்கு ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிப்பவர்களின் லிஸ்ட்டையும், இதன் கதையென்ன என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதன்படி 8-ம் நூற்றாண்டை சேர்ந்த உத்தமன் என்ற தெய்யாட்டம் ஆடும் கூத்துக் கலைஞனாகவும், தற்போதைய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மனோரஞ்சன் என்னும் கலைஞனாகவும் இரட்டை வேடம் போட்டிருக்கிறார் கமல்..

8-ம் நூற்றாண்டு கலைஞன், 21-ம் நூற்றாண்டில் புதிய அவதாரமெடுத்து தன்னை உணர்வதுதான் கதைதான் என்றால் இது மறு ஜென்மக் கதையாகத்தான் தோன்றுகிறது. இது போன்ற கதைகள்தான் சமீபத்தில் மிகப் பெரிய அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளன. ‘மகாதீரா’, ‘நான் ஈ’ ஆகிய திரைப்படங்கள் இது போன்ற கதைதான்..!

இந்த இரண்டு படங்களும் தென்னிந்திய சினிமாவில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. ஆக.. மீண்டும் ஒரு உண்மையான வெற்றியை கொண்டாட கமல் தயாராகிவிட்டார் என்றே தோன்றுகிறது..!

Our Score