full screen background image

‘உப்பு கருவாடு’ படப்பிடிப்பு முடிந்தது..!

‘உப்பு கருவாடு’ படப்பிடிப்பு முடிந்தது..!

இயக்குநர் ராதாமோகனின்  இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில்  கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாய் வளர்ந்துவரும் இப்படம ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாய் மாறியுள்ளது.

“தமிழில் சிறந்த படங்களை தொடர்ச்சியாக தந்து வரும் இயக்குனர் ராதா மோகன், மீண்டும் ஒரு அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரது  திறமையான உழைப்பு படத்தை குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளனது. ‘உப்பு கருவாடு’ குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகிறது. விரைவில் ரசிகர்கள் கண் பார்வைக்கு வரவிருக்கிறது ‘உப்பு கருவாடு” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளரான ராம்ஜி நரசிம்மன். 

Our Score