full screen background image

‘உப்பு கருவாடு’ படத்தின் இசை அக்டோபர் 11-ல் வெளியீடு..!

‘உப்பு கருவாடு’ படத்தின் இசை அக்டோபர் 11-ல் வெளியீடு..!

ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

uppu karuvaadu-poster

“படம் பார்த்த பிறகு எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தணிக்கை அதிகாரிகளால் ‘யு’ சான்றிதழ் கிடைக்கப் பெற்றது எங்களுக்கு மிகவும் ஊக்கம் தந்த செய்தி.

இயக்குநர் ராதாமோகனின் படங்கள் என்றாலே இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிந்ததே.

இந்த ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தில்  ஸ்டீவ் வாட்ஸ் என்ற பிரபல கிடார் கலைஞர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளராக வருவார் என்ற நம்பிக்கை பாடல்களை கேட்கும் அனைவருக்குமே தோன்றும்.

வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் இசை படத்தின்  வெற்றிக்கு நிச்சயம்  கட்டியம் கூறும்..” என்கிறார் படத்தின் தயாரிப்பாளர்  ராம்ஜி நரசிம்மன்.

Our Score