full screen background image

பிப்ரவரி-மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள்

பிப்ரவரி-மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள்

‘கொரோனா’ வைரஸின் மூன்றாவது அலையான ‘ஓமைக்ரான்’ வைரஸ் தற்போது பரவலாக தமிழகத்தில் பரவியிருப்பதால் அதைத் தடுக்கும் பொருட்டு சினிமா தியேட்டர்களில் 50 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி தந்துள்ளது தமிழக அரசு.

இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதுமே சினிமா தொழில் மந்தமாக உள்ளது. பல சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவிருப்பதால் விரைவில் தியேட்டர்களில் முழுமையான அளவுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திரையுலகத்தினர் கருதுகிறார்கள்.

இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலை இறுதி செய்திருக்கிறார்கள்.

இதன்படி வரும் பிப்ரவரி 4-ம் தேதியன்று விஷால் நடித்திருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

பிப்ரவரி 11-ம் தேதி ‘கடைசி விவசாயி’ மற்றும் ‘FIR’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

பிப்ரவரி 23-ம் தேதியன்று ‘ஹே சினாமிகா’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

பிப்ரவரி 24-ம் தேதி ‘வலிமை’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 4 அல்லது 12-ம் தேதியில் ‘ராதே ஷ்யாம்’ படம் வெளியாகவுள்ளது.

மார்ச் 11 அல்லது 18-ம் தேதியில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாகவுள்ளது.

மார்ச் 25-ம் தேதியன்று ‘டான்’ மற்றும் ‘யானை’ ஆகிய படங்கள் வெளியாக வாய்ப்புண்டு.

‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் தேதி ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதியன்று விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஏப்ரல் 14-ம் தேதியன்று ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் 2-ம் பாகம் வெளியாகுமாம்.

இந்தப் பட்டியல் உறுதியானதல்ல. கடைசி நிமிட மாறுதலுக்குட்பட்டது.

Our Score