பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார், நந்தனா ஆனந்த் நடித்த ‘நின்னு விளையாடு’ என்ற திரைப்படத்தை தயாரித்து கடந்த மே மாதம் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக வெளியிட்ட ராஜ் பீக்காக் மூவிஸ் தனது இரண்டாவது படைப்பாக ‘உனக்கும் மேலே’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரிக்கிறது.
நட்டி நட்ராஜ் நடித்த ‘குருமூர்த்தி’ படத்திற்கு வசனம், பாடல் எழுதியதுடன் ‘நின்னு விளையாடு’ படத்தைப் பாடல்கள் எழுதி தயாரித்த கீர்த்திவாசன்தான் இந்த ‘உனக்கும் மேலே’ படத்தையும் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
கடந்த விஜயதசமி 12-10-24 அன்று பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல் எழுத, ‘குருமூர்த்தி’, ‘நின்னு விளையாடு’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த சத்யதேவ் உதயசங்கர் இசை அமைக்க, ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ என்ற பாடலை இளைய தளபதி விஜய் அவர்களுடன் சேர்ந்து பாடிய எம்.எம்.மானசி பாட, பாடல் பதிவுடன் உனக்கும் மேலே புதிய படத்தின் டைட்டில் பதிவு செய்யப்பட்டது.
இன்றைய முன்னணி டெக்னீஷியன்கள் இப்படத்தில் இடம் பெறுகின்றனர். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடிக்கும் இன்றைய கமர்ஷியல் நடிகர், நடிகைகள் நடிக்க, கேரளா, கர்நாடகா, ஊட்டி, குன்னூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வட மாநிலங்களில் வரும் தைப்பொங்கல் திருநாள் முதல் உனக்கும் மேலே திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதாக துவங்குகிறது.இந்த படத்திற்கு தேவையான துணை நடிகர், நடிகைகள் தேர்வு அலுவலகத்தில் நடந்து வருகிறது.