‘பி.கே.பிலிம் பேக்டரி’ நிறுவன உரிமையாளர் ஜி.விட்டல் குமாரின் தயாரிப்பில், உருவாகியிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் வருகின்ற மே 12-ம் தேதி அன்று வெளியாக உள்ளது.
‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் மீண்டும் இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர். அதிரடியான கதைக் களத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘உள்குத்து’ திரைப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார்.
முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷை காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
“தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வெற்றி கண்டு வருவது எங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. இப்போதெல்லாம், ‘நல்ல தரமான கதையம்சம் நிறைந்த படங்களை அதிகளவில் திரையிடுங்கள்’ என்றுதான் திரையரங்கு உரிமையாளர்களிடம் ரசிகர்கள் கேட்கின்றார்கள். அதை நிரூபிக்கும் வண்ணமாக எங்களின் ‘உள்குத்து’ திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும்.
எங்களுக்கு உறுதுணையாய் இருந்து, தன்னுடைய பேராதரவை அளித்து வரும் அபினேஷ் இளங்கோவன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்…” என்கிறார் தயாரிப்பாளரும், ‘பி.கே.பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜி.விட்டல் குமார்.