full screen background image

அஹமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் நியூயார்க்கில் ஷூட்டிங்..!

அஹமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் நியூயார்க்கில் ஷூட்டிங்..!

ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமது இயக்கத்தில் வெளிவந்த ‘என்றென்றும் புன்னகை’ திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சக்கை போடு போட்டது.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று ‘சிருனவ்வுல சிருஜலு’ என்ற பெயரில் நேற்று வெளியானது. தமிழை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கடுத்து இயக்குனர் அஹமது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் ‘இதயம் முரளி’ என்னும் புதிய படத்தை இயக்கவுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இதன் முதல் கட்ட வேலையாக அமேரிக்காவில் உள்ள நியூயார்க்கில் படபிடிப்பு நடத்த தகுதியான இடங்களை தேர்ந்தெடுக்கும் வேலைகளில் மும்முரமாய் இறங்கியுள்ளார் இயக்குனர் அஹமது. படபிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்த பின் விரைவில் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கவுள்ளது.

Our Score