அஜீத்-விஜய் ரசிகர்கள் மோதலுக்கு வழிவகுக்கும் ‘கங்காரு’ படம்..!

அஜீத்-விஜய் ரசிகர்கள் மோதலுக்கு வழிவகுக்கும் ‘கங்காரு’ படம்..!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  சார்பில்  ‘கங்காரு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சாமி இயக்கியுள்ளார். அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின்  தங்கையாக  பிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக  வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார்.

photo 1

மேலும்  தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு,  இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்  இயக்குநர் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார்.   

‘கங்காரு’ படத்தில் அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை வைத்துள்ளார் சாமி. படத்தில் பிரியங்கா தல அஜீத்தின் ரசிகையாகவும், வர்ஷா விஜய்யின் ரசிகையாகவும் வருகிறார்கள்.

photo 2

இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை, பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக் கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை ஐந்து நிமிடங்களுக்கு நீடிக்கிறதாம்.  படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும்  காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

‘கங்காரு’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி 150 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.