full screen background image

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரக்சிதா மகாலட்சுமி நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படம்

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரக்சிதா மகாலட்சுமி நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படம்
மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது.

இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கேபிஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

தயாரிப்பு : ஐமாக் ஃபிலிம்ஸ் பிரைவேட்.லிட்., & ஸ்கை ஃபிரேம் என்டர்டெயின்மென்ட், தயாரிப்பாளர் : மொஃஹிதீன் அப்துல் காதர் & மணி, எழுத்து & இயக்கம் : ஷரீஃப், ஒளிப்பதிவு : கே.ஜி.ரத்தீஷ், படத் தொகுப்பு : அஜித், இசை : ‘இசைப்பேட்டை’ வசந்த், கலை இயக்கம் : வேணு, சண்டைப் பயிற்சி : ஓம்பிரகாஷ், நடனம் : ‘கலைமாமணி’ ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பு : ஈகா பிரவீன், படங்கள் : சக்தி பிரியன், விளம்பர வடிவமைப்பு : மோனிக் | டிஜின் ஸ்டுடியோஸ், தயாரிப்பு நிர்வாகி : நந்தகுமார், பத்திரிக்கை தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்தனர்.

இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக் குழு தயாராகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிக்கும் கே.எஸ்.ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக் குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படத்தின் பூஜை இன்று காலை பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் நடைபெற்றது.

இந்த பூஜை நிகழ்வில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது. என்னுடைய கதாப்பாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. மேலும் இந்தப் படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது. இயக்குநர் ஷரீஃப் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி பேசும்போது, “இந்தப் படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை  பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் ஷரீஃப் பேசும்போது, “இந்த யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும், என் கதையையும் நம்பி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும், ஊடகத் துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

Our Score