full screen background image

பயத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் அனுபவம்தான் ‘டம்ளர்’ திரைப்படம்

பயத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் அனுபவம்தான் ‘டம்ளர்’ திரைப்படம்

எம்.கே.சினி ஆர்ட்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘டம்ளர்’.

‘நந்தன்’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து கவனம் பெற்ற நடிகை சுருதி பெரியசாமி இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பால்பாண்டி, இசை – மினிஷ் தம்பான், படத் தொகுப்பு – வளர் பாண்டி, எழுத்து, இயக்கம் – சிற்பி மாதேஸ்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் சிற்பி மாதேஸ் பேசும்போது, “கோவிலில் ஒரு சிற்பி சாதாரண கல்லுக்குள் மறைந்திருக்கும் உருவத்தை நுட்பமாக வெளி கொண்டு வருவதை போல், மனித மனதின் அடுக்குகளில் புதைந்திருக்கும் உணர்வுகளையும், அமைதிக்குள் பதுங்கி இருக்கும் அச்சத்தையும் இந்தப் படத்தில் காண்பித்துள்ளேன்.

இந்த ‘டம்ளர்’ திரைப்படம் ஒரு படமாக மட்டுமல்ல; பயத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு சினிமா அனுபவமாகவும் இருக்கும்” என்றார்.

இந்த ‘டம்ளர்’ திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர உள்ளது.

Our Score