சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவன் சுப்ரமணி எழுதி தயாரித்து நடித்து இயக்கம் படம் ‘பொம்மி அப்பா பேரு சிவன்’!.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சிவன் சுப்பிரமணி பேசுகையில், “ஒரு கிராமத்தில் வசதி வாய்ப்பு இல்லாத அடித்தட்டு குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் தனது பெற்றோரை இழந்து உறவினர்களின் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையில் எப்படி போராடி சாதிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற படமாக இனிவரும் காலங்களில் பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தில் உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறேன்.
மக்களிடம் ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் போன்ற வேறுபாடுகளை களைய கல்வி என்ற ஆயுதத்தை களமாக வைத்து இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன்” என்றார்.
இந்த ‘பொம்மி அப்பா பேரு சிவன்’ திரைப்படம், விரைவில் திரைக்கு வர உளளது.









