“திரைப்படங்களின் தியேட்டர் வசூல் பற்றிய விவரங்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க வேண்டாம்” என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் தனது சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கும் ஆடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தச் செய்தியில், “சமீப காலமாக பத்திரிகையாளர்கள் பலரும் நமக்கு போன் செய்து தியேட்டர் வசூல் விவரங்களைக் கேட்கிறார்கள். நாட்டில் எத்தனையோ தொழில்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பெட்ரோல் பங்க், மளிகைக் கடை, பெரிய மால்கள்.. துணிக்கடைகள் என்று.. அவர்களிடத்தில் எல்லாம் கேட்காத கேள்வியை பத்திரிகையாளர்கள் நம்மிடம் கேட்கிறார்கள்.
இவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டாம். தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தமிழக அரசு.. இந்த மூன்று பேருக்கு மட்டுமே நான் உரிய பதிலைச் சொல்வோம். வேறு எவரிடமும் தியேட்டர் வசூல் விவரங்களை நாம் ஷேர் செய்து கொள்ள வேண்டாம். இதை சங்க உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்..” என்று அந்த ஆடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.