யோகிபாபு, கருணாகரன் இணையும் ‘ட்ரிப்’ திரைப்படம்..!

யோகிபாபு, கருணாகரன் இணையும் ‘ட்ரிப்’ திரைப்படம்..!

யோகிபாபு, கருணாகரன் இருவரும் தற்போதைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நாயகர்கள். இருவரும் வேறு, வேறு பாதையில் ரசிகர்களை தங்களது தனிப்பட்ட திறமைகள் மூலம் கவர்ந்து தங்களுக்கான தடத்தை பதித்தவர்கள்.  

அந்த  வகையில் தற்போது இருவரும் இணைந்து  டார்க் காமெடி கலந்த, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ‌ திரில்லர் படமான ‘ட்ரிப்’ திரைப்படம் மூலமாக ரசிகர்ளை மகிழ்விக்க வருகிறார்கள்.

இந்த ‘டிரிப்’ படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் விஸ்வநாதன், ப்ரவீன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். 

நடிகை சுனைனா, ‘100’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த பிரவீண் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள்.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் புகழ் பெற்றுள்ள  சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத் தொகுப்பினை மேற்கொள்கிறார்.  

‘டார்லிங்’, ‘100’ படங்களின் இயக்குநர் சாம் ஆண்டனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் டென்னிஸ் இந்த டிரிப் படம் பற்றிப் பேசும்போது, இந்த ‘ட்ரிப்’ திரைப்படம் உல்லாச பயணத்தை அடிப்படையாக கொண்டது. இது ஒரு டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர்.

இரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.  வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள்   அப்பயணத்தை அட்வெஞ்சராக்குகிறது.

இடையில் அவர்கள் வேறு ஒரு பயணத்தில் உள்ள  5 பசங்களையும், 4 பெண்களையும் சந்திக்கும்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுகிறது. இதுவே இப்படத்தின் கதை.

‘100’ படத்தில் வேலை பார்த்தபோதே இக்கதை பற்றி அறிந்து கொண்ட நடிகர் யோகிபாபு முழுக் கதையையும் தயார் செய்த பிறகு தன்னை வந்து பார்க்கச் சொன்னார். அதன்படியே நேரில் சென்று கதையைச் சொன்னேன். முழு திருப்தியுடன் நடிக்க ஒத்துக் கொண்டார்.

படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து பயணிக்கும் இன்னொரு கேரக்டரை பற்றி சிந்திக்கும்போது எனக்கு கருணாகரன் மட்டுமே மனதில் வந்தார். அவர் மட்டுமே இந்த பாத்திரத்தை செய்ய முடியும் எனத் தோன்றியது. மேலும் இருவரின் டைமிங் காமெடியும், நகைச்சுவையில் உள்ள தனித்திறமையும் இப்படத்தின் கதைக்கு முழுக்க தேவையானது.

இத்திரைப்படம் ஓணம் பாண்டிகையின் கொண்டாட்டத்தில் ஒரு அங்கமாக செப்டம்பர் 16-ம் தேதி  தொடங்கப்படுகிறது. ஒரே கட்டமாக தொடர்ந்து 40 நாட்கள் தலக்கோணம், கொடைக்கானல், சென்னை பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது...” என்றார்.