யோகிபாபு, கருணாகரன் நடிக்கும் ‘ட்ரிப்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!

யோகிபாபு, கருணாகரன் நடிக்கும் ‘ட்ரிப்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!

யோகிபாபு, கருணாகரன் இருவரும் இணைந்து  நடிக்கும் டார்க் காமெடி கலந்த, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ‌ திரில்லர் படமான ‘ட்ரிப்’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியானது..!

இந்த ‘டிரிப்’ படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் விஸ்வநாதன், ப்ரவீன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

நடிகை சுனைனா, மற்றும் ‘100’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த பிரவீண் குமார் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் புகழ் பெற்றுள்ள  சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.உதய சங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத் தொகுப்பினை மேற்கொள்கிறார்.

கலை இயக்கம் – பாக்கியராஜ், சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, தயாரிப்பு நிர்வாகம் – தேனி தமிழ், அறந்தை பாலா, பாடல்கள் – மோகன்ராஜன், உடைகள் வடிவமைப்பு – நிவேதா ஜோஸப், உடைகள் – பாலாஜி, கேஸ்டிங் – ஸ்வப்னா, ஸ்டில்ஸ் – ஜி.கே., ஒப்பனை – ஏ.பி.முகம்மது, நடன இயக்கம் – தாஸ்தா, ஒலி கலப்பு – ஜெய்சன் ஜோஸ், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு நம்பூதிரி, கிராபிக்ஸ் – ஓம் ஸ்டூடியோ, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, விளம்பர வடிவமைப்பு – சபா டிசைன்ஸ். 

‘டார்லிங்’, ‘100’ படங்களின் இயக்குநர் சாம் ஆண்டனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இந்த ‘டிரிப்’ படம் பற்றிப் பேசும்போது, "இத்திரைப்படம் திரைப்படம் ஒரு உல்லாச பயணத்தை அடிப்படையாக கொண்டது. இது ஒரு டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர்.

இரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.  வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள். அப்பயணத்தை அட்வெஞ்சராக்குகிறது.

இடையில் அவர்கள் வேறு ஒரு பயணத்தில் உள்ள  5 பசங்களையும், 4 பெண்களையும் சந்திக்கும்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுகிறது. இதுவே இப்படத்தின் கதை.

இத்திரைப்படம் ஓணம் பாண்டிகையின் கொண்டாட்டத்தில் ஒரு அங்கமாக கடந்த செப்டம்பர் 16-ம் தேதி  தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக தொடர்ந்து 40 நாட்கள் தலக்கோணம், கொடைக்கானல், சென்னை பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது கொரோனா பாதிப்பில் உலகமே இயங்காமல் இருக்கும் நிலையில் எங்களது ‘டிரிப்’ படமும் வெளியாக முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளது. கொரோனா பிரச்சினை முடிந்ததும் ‘டிரிப்’ திரைப்படம் சர்வ நிச்சயமாக தமிழ் ரசிகர்களிடையே உலா வரும்.." என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.

இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் இன்றைக்கு வெளியிடப்பட்டது..!