அசோக் செல்வன், ரித்விகா, அஞ்சு குரியன் நடிக்கும் புதிய திரைப்படம்

அசோக் செல்வன், ரித்விகா, அஞ்சு குரியன் நடிக்கும் புதிய திரைப்படம்

தமிழ்த் திரையுலகில் திரைப்பட விநியோகம் செய்து கொண்டிருக்கும் AR ENTERTAINMENT எனும் நிறுவனம் திரைப்பட தயாரிப்பிலும் அடியெடுத்து வைக்கிறது.

இந்நிறுவனத்தின் முதல் படைப்பை அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் எழுதி இயக்குகிறார்.

இவர் சந்துரு மற்றும் மதுமிதா ஆகிய இயக்குர்களிடம் உதவி இயக்குநராகவும், டிவி, OTT மற்றும் விளம்பரத் துறைகளிலும், பிக்பாஸ்’ போன்ற முன்னணி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றிய அனுபவம் உடையவர்.

இத்திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் அஷோக் செல்வன், ரியா, பிரவீன்ராஜா, ரித்விகா, அபிஹாசன், அஞ்சு குரியன், மணிகண்டன் ஆகியோர் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், K.S.ரவிக்குமார், பானுப்பிரியா, மற்றும் அனுபமா குமார் ஆகியோர் ஒன்றிணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

‘விக்ரம் வேதா’ படத்தின் புகழ் பெற்ற வசனகர்த்தா மணிகண்டன் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘KD என்கிற கருப்பு துரை’ படத்தின் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜுன் ரெட்டி’  திரைப்படத்தின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரதன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், பிரசன்னா G.K. படத் தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படம் வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு கதாபாத்திரங்களின் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையாக உருவாக்கபட்டு இருக்கின்றது. இரண்டு நாட்களில் நடக்கும் இந்தக் கதை மனித மனத்தின் உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் பற்றிப் பேசும் படமாகவும் இருக்கும்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் பங்கு கொள்ளும் நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமியும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் இந்த பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது, TRIDENT ARTS நிறுவனம் இந்தப் படத்தை வெளியீடுகிறது.

Our Score