full screen background image

அப்துல் கலாமின் கல்லூரியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் வெளியீடு..!

அப்துல் கலாமின் கல்லூரியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் வெளியீடு..!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT பொறியியல் கல்லூரியில்தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படித்தார்.

அந்தக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது.

அதில் மாணவர்கள் ஹரிஷ், மற்றும் ரேஷ்மா இருவரும் டைட்டிலை வெளியிட கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில் டிராபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்த பெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

படம் பற்றி நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகரன் கூறும்போது “யாரையும் எதிர்பார்க்காமல் எளியவர்களுக்கு ஆதரவாகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் போராளியின் படத்தை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்கத்தான் இவ்விழாவை மாணவர்கள் மத்தியில் நடத்தினோம்…” என்றார்.

இந்த விழாவில் டிராபிக் ராமசாமியாக நடிக்கும் S.A.சந்திரசேகரன், நடிகை அம்பிகா, லிவிங்ஸ்டன், புலி படத்தின் தயாரிப்பாளர் P.T.செல்வகுமார் மற்றும் படத்தின் இயக்குநர் விக்கியும் கலந்து கொண்டனர்.

Our Score