full screen background image

திரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய  ‘டிராபிக் ராமசாமி’ 

திரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய  ‘டிராபிக் ராமசாமி’ 

சமுதாயத்துக்கும்,  சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக் காட்டி ‘புரட்சி இயக்குநர்’ என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சந்திரேசகர் . 

இவர் தற்போது தமிழகத்தின் தனிப் பெரும் போராளியாகத் திகழும் டிராபிக்  ராமசாமி போன்ற கேரக்டரில் ‘டிராபிக் ராமசாமி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் ரோகிணி, பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ,  ஆர்.கே.சுரேஷ்,  அம்பிகா,  உபாசனா, கஸ்தூரி,  மனோபாலா,  மதன் பாப்,  லிவிங்ஸ்டன்,  இமான்  அண்ணாச்சி,  மோகன்ராம்,  சேத்தன்,  தரணி,  அம்மு  ராமச்சந்திரன்,  பசி  சத்யா  என்று  பலரும்  நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் மற்றுமொரு பிரபல நடிகரும்  சிறப்பு  வேடத்தில் நடித்திருக்கிறார். 

படத்திற்கு  குகன் எஸ். பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை  ‘இருட்டறையில்  முரட்டு குத்து’ புகழ் பாலமுரளி பாலு. படத் தொகுப்பு -பிரபாகர்,  கலை இயக்கம் – ஏ.வனராஜ், சண்டை  இயக்கம் – அன்பறிவு,  கிரீன்  சிக்னல்  நிறுவனம் இப்படத்தை  தயாரித்துள்ளது.

சமீபத்தில்  ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தை  பிரத்யேகமாக பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கை தட்டியது படக் குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதைப் பற்றி இயக்குநர் விக்கி கூறும்போது, “விநியோகஸ்தர்கள் ஒரு படத்தை ப்ரிவியூ அரங்கில் பார்த்துவிட்டு கைதட்டி வரவேற்பது இதுதான் முதல் முறை என்று எண்ணுகிறேன். இப்பாராட்டு சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்விற்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.  

தயாரிப்பாளர் சங்கம் இப்பட வெளியீட்டு தேதியாக ஜூன்-22-ம் தேதியைக் குறித்துக்  கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில்  உள்ளோம்.

விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரை அருகிலிருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்களிடம் உதவி இயக்குநராக  சேர்ந்தேன்.அவர் தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள ‘டிராஃபிக் ராமசாமி’ படம் தளபதியின் பிறந்த நாளில் வெளியாவதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதைவிட ஒரு ரசிகனுக்கு வேறு என்ன வேண்டும்…?” என்று நெகிழ்ந்தார்.

Our Score