full screen background image

“என் கேரியர்லேயே இந்தப் படம்தான் வசூலில் டாப்!” – நடிகர் சசிகுமார் பெருமிதம்..!

“என் கேரியர்லேயே இந்தப் படம்தான் வசூலில் டாப்!” – நடிகர் சசிகுமார் பெருமிதம்..!

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘டூரிஸ்ட் ஃபேமிலி‘.

கடந்த மே 1-ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.

திரையரங்குகளை திருவிழாக் கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசும்போது, “எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்த அபி அண்ணாக்கு ரொம்ப நன்றி. அதுக்கப்புறம் ப்ரொடியூசர்ஸ் யுவராஜ் அண்ணாவிற்கு நன்றி. சசிகுமார் அங்கிள், என்னிடம் ரொம்ப பாசமா இருந்தார், ரொம்ப சந்தோஷம். நன்றி அங்கிள். அப்பறம் சிம்ரன் மேம், உங்ககூட நடித்தது ரொம்ப சந்தோஷம் மேம். அதுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் பகவதி பெருமாள் பேசும்போது, “இந்த மாதிரி ஒரு சக்சஸ் மீட் நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். நானும் அவ்வப்போது பார்த்திருக்கேன். ஆனால் இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இயற்கைக்கு நன்றி. இந்தப் படம் பண்ணும் பொழுதே அந்த பிளஸ்சிங் இருந்துட்டே இருந்தது. இந்தப்படத்தை அவ்வளவு அழகா ஆடியன்ஸ்கிட்ட கொண்டு போன பத்திரிக்கையாளர்களுக்கு ரொம்ப நன்றி. எல்லோருக்கும் நன்றி…” என்றார்.

 

நடிகை சௌந்தர்யா பேசும்போது, “என் சந்தோசத்தை சொல்ல அளவே கிடையாது. எனது 8 வருட திரைப் பயணத்தில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இதுதான். இப்படிப்பட்ட வெற்றி மேடையில் முதல் முறையாக பேசுகிறேன்.

முதல் நன்றி அபிக்கு. வேறு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அவர் நான்தான் வேண்டும் என என்னை காஸ்ட் செய்தார். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சசிகுமார் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. சிம்ரன் மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை. அவர் அவ்வளவு ஃபிரண்ட்லி. அவருடன் மீண்டும் நடிக்க ஆசை. என் கேரக்டரை தனியாக குறிப்பிட்டு பாராட்டிய, அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இனிமேல் வரும் காலத்தில் உங்களை மகிழ்விக்கும் பாத்திரங்களை ஏற்று நடிப்பேன். நன்றி..” என்றார்.

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசும்போது, “இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த பாராட்டுக்களுக்கு நன்றி. சசிக்குமார் சார் இது உங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸ். ‘அயோத்தி’ படத்திலிருந்து உங்கள் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய பிரம்மாண்ட வெற்றிப் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

என் ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் தந்த, ‘ஜில்லா விட்டு ஜில்லா’ பாடல்தான் என் திரை வாழ்க்கையை நிலை நிறுத்தியது. அதற்காக நன்றி. ‘குட் நைட்’ படத்திற்கு பிறகுதான், என் வெற்றிப் பயணம் துவங்கியது. கடந்த வருடம் ‘லப்பர் பந்து’ எனக்கும் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படி ஒரு படம் மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு அமைய வேண்டும் என ஆசைப்பட்டோம். அது இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடந்துள்ளது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி..” என்றார்.

எடிட்டர் பரத் விக்ரமன் பேசும்போது, “இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. நான் மிக சந்தோசமாக இருக்கிறேன். படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் என் அம்மா என்னிடம் ஈவ்னிங் ஷோ டிக்கெட் கேட்டார்கள் ஆனால் மறுநாள் வரை ஷோ ஃபுல்லாக இருந்தது. என் சந்தோசத்துக்கு அளவே இல்லை. அபி இன்னும் பல உயரம் செல்வாய். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நன்றி..” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, “ஒரு நல்ல படத்தை ரசிக்கிற வகையில் செய்துவிட்டால், மீடியா எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவார்கள். அதை செய்து காட்டிய பத்திரிக்கைக்கு நன்றி. என் அஸிஸ்டெண்ட் சபரி, அஸ்வின் மற்றும் என் டீம் அனைவருக்கும் நன்றி. எல்லாப் படங்களுக்கும் ஒரே மாதிரிதான் உழைப்போம். ஆனால் சில படம் நமக்கு ரொம்ப பிடித்து விடும்.

யுவராஜ் பிரதர் நீங்கள் ஜெயிக்க வேண்டும். நீங்கள் நினைத்ததைவிட அதிகம் நான் ஆசைப்பட்டேன். தமிழ் சினிமா மரத்தில் ஒரு புது கிளை ஆலமரமாக முளைத்து கொண்டிருக்கிறது. பரத் மிக முக்கியமான ஆளாக வளர்ந்து வருகிறார். வாழ்த்துக்கள். பாடலாசிரியர் மோகன்ராஜன் என் ஃபேமிலி மாதிரிதான். அவருக்கு என் வாழ்த்துக்கள். அபியை இனி பிடிக்கவே முடியாது. முதல் படத்தை வெற்றிப் படமாக தந்துவிடலாம். ஆனால் இப்படி ஒரு படத்தை பெரிய நடிகர்களை வைத்து செய்வது கடினம். அதை சாதித்த அபிக்கு வாழ்த்துக்கள்.

சிம்ரன் மாதிரியான ஃபெர்மாருக்கு இசையமைத்தது பெருமை. சசி என் அண்ணன் அவரது சினிமா பயணத்திற்கான சரியான அங்கீகாரமாக இப்படம் அமைந்துள்ளது. சினிமாவில் நிலைத்து நிற்க நல்ல குணம்தான் முக்கியம். அதை அவரிடம் உணர்ந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

 

இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசும்போது, “முந்தைய நிகழ்வினில்., என் குழு அனைவருக்கும் நன்றி சொன்னேன். இப்போது பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

உங்கள் பாரட்டினால்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்துள்ளார்கள். என் ஃபேமிலியோடு படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை, இப்படத்தை வெற்றிப் படமாக்கி தந்த யுவராஜ் அண்ணா மகேஷ் அண்ணாவிற்கு நன்றி.

சசி அண்ணா இந்தப்படத்தில் வருவது போலதான்.. உங்களுக்கே தெரியாது.. நீங்கள் எனக்கு எவ்வளவு செய்துள்ளீர்கள் என்று.. எல்லாவற்றிக்கும் நன்றி. சிம்ரன் மேம் உங்களுடன் வேலை பார்த்தது கனவு மாதிரி உள்ளது, இந்த வாய்ப்பைத் தந்ததுக்கு நன்றி. ஷான் ரோல்டன் அண்ணா எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. என் குழு அனைவருக்கும் நன்றி..” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் “இது ஒரு நன்றி சொல்லும் விழா. எங்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எப்போதும் நல்ல கதைகளை ஜெயிக்க வைக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் அபிக்கு வாழ்த்துக்கள். என் தம்பி ஜெயித்தது போல் உள்ளது. சசி சார் தம்பி எனக்குப் பழக்கம், அவர் வீட்டுக்குப் போய் போட்டோ எடுத்து வந்துள்ளேன். ஆனால், அவரை வைத்து படமெடுப்பேன் என நினைக்கவில்லை. எங்கள் பேனரில் நடித்ததற்கு நன்றி.

சிம்ரன் மேமுக்கு நான் மிகப் பெரிய ஃபேன், நான் படிக்கும் காலத்தில் ஷீட்டிங்கில் அவரைப் பார்க்க அலைந்துள்ளேன். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அற்புதமான இசையை தந்த ஷான் ரோல்டன் ஐயாவிற்கு நன்றி. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் மூலம் நல்ல படங்கள்தான் வருமென ‘குட் நைட்’ பட விழாவில் சொல்லியிருந்தேன். அதையேதான் இப்போதும் சொல்கிறேன். தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம். நன்றி..” என்றார்.

நடிகை சிம்ரன் பேசும்போது, “எல்லோருக்கும் நன்றி. அபி கதை சொன்னபோதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்றேன். அப்போதே மகேஷை மீட் செய்து இந்தப் படம் செய்கிறேன் என்று சொன்னேன். நான் பல வருடங்களாக இந்த துறையில் உள்ளேன். நீங்கள் தரும் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு காரணம். உங்களுக்கு நன்றி. சசிகுமார் சார் மிக அற்புதமான மனிதர். அற்புதமான இயக்குநர் அற்புதமான கோ ஸ்டார். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 20 வருடம் கழித்து மீண்டும் என்னை உருவாக்கியுள்ளார்கள். என் குழு அனைவருக்கும் நன்றி..” என்றார்.

 

நடிகர் சசிகுமார் பேசும்போது, “பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த வெற்றிதான் இது. நீங்கள் சம்பளத்தை ஏத்தி விடுவீர்களா எனக் கேட்டீர்கள். கண்டிப்பாக ஏத்த மாட்டேன். இந்தப்படத்தை இந்த பட்ஜெட்டில்தான் எடுக்க வேண்டும். அப்போதுதான் அது வெற்றி பெறும். இந்தப் படம் நிறையப் பேரின் கனவை நனவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது.

ஒரே மாதிரி படம் பண்ண வேணாம். டிஃபரண்ட், டிஃபரண்டா படம் பண்ணலாம். வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் அப்படின்ற ஒரு நம்பிக்கையை, இந்த படம் கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வந்துகிட்டே இருக்காங்க. எனக்கு பல ஆண்டுகளுக்கு அப்புறம் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.

இது என்னோட வெற்றியா நான் நினைக்கவில்லை. இந்த படம் வெற்றிய வந்து ஒரு சசிகுமார் ஜெயிச்சுட்டான். ஒரு மில்லியன் டாலர் ஜெயிச்சிருச்சு அப்படின்னு நினைக்காதீங்க. புது தலைமுறை ஜெயித்துள்ளது. தோல்வி அடைஞ்ச இயக்குநர்களுக்கு இப்படம் நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

நாம் வெற்றி பெற, முதலில் நாம் நம்ம தோல்வியை ஒத்துக்கணும். நான் தோல்வி அடைஞ்சிருக்கேன். என் தோல்வியை ஒவ்வொரு தடவையும் நான் ஒத்துக்கிட்டேன்.

இந்த படம் முதல் நாள் கலெக்ஷன் என்ன என்பது உங்க எல்லாருக்கும் தெரியும். தயாரிப்பாளர்கள் எல்லா நடிகர்கள்கிட்டயும் உண்மைய சொல்லுங்க. எவ்வளவு ஓடி இருக்குன்னு சொல்லுங்க.. ஏன் மறைக்கறீங்க… மறைக்காதீங்க.. எவ்வளவு ஓடி இருக்குன்னு சொன்னாதான் யாரும் சம்பளம் ஏத்த மாட்டாங்க.. அப்பதான் உண்மையா இருப்பாங்க… இந்தப் படம் முதல் நாளைவிட இப்போதுதான் அதிக வசூல்.

என்னுடைய ஹையஸ்ட் வசூல் ‘சுந்தரபாண்டியனும்’, ‘குட்டிப் புலி’யும்தான். அந்த ‘குட்டிப் புலி’, ‘சுந்தர பாண்டியன்’ கலெக்ஷனை இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தாண்டியுள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிவரும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை வர வேண்டும் என்பதால்தான் இதைச் சொல்கிறேன்.

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே யுவராஜ் ரொம்ப கான்ஃபிடென்ட்டா இருந்தார். என்னைவிட இப்படத்தின் மீது நம்பிக்கை வச்சது இந்த ப்ரொடியூசர்ஸ் ரெண்டு பேரும்தான். அவங்கதான் இது மேல ரொம்ப நம்பிக்கை வச்சாங்க.. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர் வந்து ரசிக்கிறார்கள். நல்ல படம் தந்தால் மக்கள் தியேட்டர் வர தயாராக உள்ளார்கள். இப்படத்தினை வெற்றிப் படமாக தந்த இயக்குநர் அபிக்கு வாழ்த்துக்கள். சிம்ரன் மேடமுக்கு நன்றி. இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சென்ற தயாரிப்பாளருக்கு நன்றிகள். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசும்போது, “இப்படத்தை வெற்றிப் படமாக்கிய பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை ஒப்புக் கொண்ட சசி சாருக்கு நன்றி. நீங்கள் செய்த நல்லதுதான் இந்த வெற்றிக்கு காரணம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி..” என்றார்.

கடந்த மே 1-ம் தேதி வெளியான இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Our Score