full screen background image

திருமலை இயக்கத்தில் நகுல் நாயகனாக நடிக்கும் ‘டுடே ஸ்பெஷல்’

திருமலை இயக்கத்தில் நகுல் நாயகனாக நடிக்கும் ‘டுடே ஸ்பெஷல்’

‘தி.நகர்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அகம்புறம்’, ‘மான் வேட்டை’ ஆகிய படங்களை தயாரித்து இயக்கியவர் திருமலை. ‘நெல்லை சந்திப்பு’ படத்தை தயாரித்தவரும் இவர்தான்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான திருமலை, அடுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘டுடே ஸ்பெஷல்’.

டி.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம். திருமலை மற்றும் ஜெசிகா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வழங்குகின்றனர்.

இந்தப் படத்தில் நாயகனாக நகுல் நடிக்கிறார். நாயகியாக ஆர்தனா பினு நடிக்கிறார். மேலும், நய்னா சாய், ரவி மரியா இருவரும் நடிக்கின்றனர். மற்றும் பிரபல நாயகி ஒருவரும், கூல் சுரேஷும் நடிக்க உள்ளனர்.

ஒய்.என். முரளி ஒளிப்பதிவையும், சித்தார்த் விபின் இசையையும், வேலு சுப்ரமணியம் வசனத்தையும், சந்துரு படத் தொகுப்பையும், கந்தாஸ் – பாபி நடன பயிற்சியையும், ஸ்டண்ட் சிவா சண்டை பயிற்சியையும், கவனிக்கின்றனர். பத்திரிக்கை தொடர்பு – விஜயமுரளி, நித்தீஷ் ஸ்ரீராம்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் எம் திருமலை பேசும்போது, “நான் இதுவரை இயக்கிய படங்களில் முற்றிலும் மாறுபட்டு, முழுவதும் வேறுபட்டு இன்றைய சமூக அவலங்களை களைவது பற்றிய கமர்ஷியலான ஜனரஞ்சகமான, அனைத்து தரப்பும் விரும்பும் வகையிலான படமாக இருக்கும். இதன் கதையை விரிவாக விரைவில் மக்களுக்கு தெரியப்படுத்துவேன்..” என்றார்.

இதன் துவக்க விழா டி.கிரியேஷன்ஸ் அலுவலகத்தில் இன்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

 

Our Score