இன்று 2015, செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் , 1 ஆங்கிலப் படமும் வெளியாகியுள்ளன.
பாயும் புலி
வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரித்திருக்கிறார். இதில் விஷால், காஜல் அகர்வால் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – ஆர்.வேல்ராஜ், இசை – டி.இமான், பாடல்கள் – வைரமுத்து, எடிட்டிங் – ஆண்ட்டனி, கலை – ராஜீவன் – சண்டை பயிற்சி – அனல் அரசு, எழுத்து-இயக்கம் – சுசீந்திரன்.
சவாலே சமாளி
A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா பாண்டியன், S.N.ராஜராஜன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான அருண் பாண்டியன் வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிந்து மாதவி கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். ஜெகன், நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்தி தாஸ், வையாபுரி, பறவை முனியம்மா, சிசர் மனோகர், நெல்லை சிவா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.செல்வகுமார், DFT, இசை – எஸ்.எஸ்.தமன், பாடல்கள் – சினேகன், கலை – தேவா, நடனம் – தினா, சண்டை பயிற்சி – ‘மிராக்கில்’ மைக்கேல், எடிட்டிங் – S.அகமது, இணை தயரிப்பு – கீர்த்தி பாண்டியன், தயாரிப்பு – கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன், எழுத்து, இயக்கம் – சத்யசிவா.
போக்கிரி மன்னன்
கர்நாடகாவைச் சேர்ந்த புதிய தயாரிப்பாளரான ரமேஷ் ரெட்டி தனது ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். நடன இயக்குநர் ஸ்ரீதர் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த ஸ்பூத்தி அறிமுகமாகியிருக்கிறார். மேலும் சிங்கம்புலி, மயில்சாமி போன்ற பெரும் தலைகளும் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு – சினிடெக் சூரி , இசை – ஏ.டி.இந்திரவர்மன், பாடல்கள் – இந்திரவர்மன், சிவகாசி ஸ்ரீதர், கவி மாதேஷ், எடிட்டிங் – பகத்சிங், கலை இயக்கம் – ஈ.சங்கர், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், வினோத், பி.ஆர்.ஓ. – நிகில், எழுதி, இயக்கியிருப்பவர் ராகவ் மாதேஷ். RSSS Pictures சார்பில் எஸ்.தணிகைவேல் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.
பானு
பசவா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீகமல்தீப் புரொடெக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் நாயகனாக நடித்த ஜீ.வி. சீனுவே இப்படத்தை இயக்கியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நந்தினிஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். கே.அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு செய்ய உதயராஜ் இசையமைத்து இருக்கிறார்.
Transporter – ஆங்கில டப்பிங் படம்
HitMan