இன்று 2015 அக்டோபர் 30 வெள்ளிக்கிழமையன்று 8 நேரடி தமிழ்ப் படங்களும், 2 டப்பிங் படங்களும் வெளியாகியுள்ளன.
1. ஓம் சாந்தி ஓம்
8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை பி.அருமைச்சந்திரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துடன் நீலம் உபாத்யாயா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜூனியர் பாலையா, ‘ஆடுகளம்’ நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – கே.எம். பாஸ்கரன், இசை – விஜய் எபிநேசர். படத்தை இயக்கியுள்ளவர் டி.சூர்யபிரபாகர்.
2. விரைவில் இசை
திரு மாருதி பிக்சர்ஸ் சார்பில் மாருதி T. பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன், ‘உடும்பன்’ நாயகன் திலீப் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். ஸ்ருதி ராமகிருஷ்ணா, அர்ப்பணா என இரு நாயகிகள். டெல்லி கணேஷ், நெல்லை சிவாவும் நடித்திருக்கிறார்கள். மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் இதில் முழு நீள நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – V.B. சிவானந்தம். இசையமைப்பாளர் – எம்.எஸ்.ராம். பாடல்கள் அண்ணாமலை, வைரபாரதி, ஸ்ரீநிக். கலை – M.D.பிரபாகரன், நடனம் – ஷ்யாம் சுந்தர், ஷாண்டி. எடிட்டிங் – சுரேஷ்குமார். ஸ்டண்ட்- சங்கர். அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்கியுள்ளார்.
3. சிக்கிக்கி சிக்கிக்கிச்சு
என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மிதுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடித்திருக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடித்திருக்கிறார். வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடித்திருக்கிறார். மற்றும் அஞ்சலிதேவி, ரோமியோ பால், அருண், அஸ்வின், குரு, அப்சல் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – என்.எஸ். ராஜேஷ்குமார், இசை – விஜய் பெஞ்சமின், பாடல்கள் – ராகுல் பிரசாத், ஹாஜா முகம்மது, நடனம் – அஜெய் சிவசங்கர், மது.ஆர், எடிட்டிங் – ஏ.கெவின், தயாரிப்பு நிர்வாகம் – டி.வி.ஜனார்த்தனன், குட்டி கிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.ராஜேஷ்குமார், தயாரிப்பு – கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார்.
4. அபூர்வ மகான்
டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரித்திருக்கும் படம் ‘அபூர்வ மகான்’.
இந்த படத்தில் ‘தலைவாசல்’ விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். மற்றும் சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர் மனோகர், வடிவுக்கரசி, மீராகிருஷ்ணன், ‘அவன் இவன்’ ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தியும் நடித்திருக்கிறார்.
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ், இசை – V.தஷி, ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், ஒளிப்பதிவு – G.சீனிவாசன், கலை – S.S. சுசி தேவராஜ், நடனம் – பவர் சிவா, மாமு சரவணன், பாடல்கள் – அண்ணாமலை, தமிழமுதன், சினேகன். ஏம்பல் ராஜா, வேலாயுதம். தயாரிப்பு மேற்பார்வை – ராம்பிரபு, இணை தயாரிப்பு – K.P.செல்வம், தயாரிப்பு – T.N.S.செல்லத்துரை தேவர், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – கே.ஆர்.மணிமுத்து.
5. ஆத்யன்
இந்தப் படத்தில் அபிமன்யு நல்லமுத்து கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். மேலும் ஜெனிஷ், மகேஷ், ஜெயச்சந்திரன், அன்பு, ருத்ரு, வினிதா, நிஷா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாசன், இசை – ஹரி G.ராஜசேகரன், பாடல்கள் – உமாதேவி, தயாரிப்பு – ரஞ்சித்குமார். திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம் மனோஜ்குமார்.
6. பள்ளிக்கூடம் போகாமலே
பெஸ்ட் ரிலீஸ் என்ற படநிறுவனம் சார்பில் டாக்டர். எஸ்.ஈ.பி.தம்பி மற்றும் எஸ்.மகேஷ் இருவரும் இனணந்து தயாரித்திருக்கும் படம் இது.
தேஜஸ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். திலீபன் புகழேந்தி வில்லனாக நடித்திருக்கிறார். மற்றும் கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, ராஜ்கபூர், தேவதர்ஷினி, எ.வெங்கடேஷ், ஓ.ஏ.கே.சுந்தர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார், இசை – சாம்சன் கோட்டூர், பாடல்கள் – நா,முத்துக்குமார், விவேகா, பி.ஜெயசீலன், கலை – சிவாயாதவ், ஸ்டண்ட் – தளபதி தினேஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ், நடனம் – காதல் கந்தாஸ், ஹபீப், தருண்ராஜ், தயாரிப்பு – டி.வி.சசி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.ஜெயசீலன்.
7. கதிர்வேல் காக்க
மனோஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜோடியாக வினிதா நடித்திருக்கிறார். மேலும் கருணாஸும் உள்ளார். குகன் ஒளிப்பதிவு செய்ய, ரவி விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். வி.என்.பிரேம்குமார் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார்.
8. இளைஞர் பாசறை
அஸ்வின், அனு கிருஷ்ணா, நளினிகாந்த் நடித்துள்ளனர். கணேச ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பு – ஜெய் சுதாகர், சின்னம்மாள் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார் ரதன்.
மகா ருத்ரம் (Qyake என்ற ஆங்கிலப் படத்தின் டப்பிங் படம்)
கூஸ்பம்ஸ் (JACk BLACK என்ற ஆங்கிலப் படத்தின் டப்பிங் படம்)