இ்ன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் அக்டோபர் 22, 2014

இ்ன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் அக்டோபர் 22, 2014

இன்று, 2014 அக்டோபர் 22 புதன்கிழமை தீபாவளி தினத்தன்று மூன்று திரைப்படங்கள் மட்டுமே ரிலீஸாகியுள்ளன.

1. கத்தி

 kathi-new-poster-1

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் விஜய் நடித்திருக்கிறார். ஹீரோயின் சமந்தா. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படம் தமிழகம் முழுவதிலும் 440 தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. உலகம் முழுவதும் 1100 தியேட்டர்களில் ரிலீஸ் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்கிறது..!

2. பூஜை

poojai-movie-posters-4

இது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம். விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் நடிகர் விஷாலே இந்தப் படத்தைத் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பிரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வி.டி.விஜயன் எடிட்டிங் செய்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் ஹரி.

இந்தப் படம் தமிழ்நாட்டில் 375 தியேட்டர்களிலும், கேரளாவில் 70 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 473 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 47 தியேட்டர்களிலும் மற்றும் வெளிநாடுகளில் 143 தியேட்டர்களையும் சேர்த்து மொத்தம் 1108 தியேட்டர்களில் ரிலீஸாகிறது..!

விஷாலின் திரைப்படம் இத்தனை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்..!

3. மேடை

medai-9

பெரும் கூட்டத்தில் ஒரு சிறிய கூடாரம் போல இந்த ‘மேடை’ படமும் ரிலீஸாகியுள்ளது. மேடை நாடகங்களில் சினிமா நட்சத்திரங்கள்போல் வேடமிடும், மேடை நாடகக் கலைஞர்கள் பலரும் சேர்ந்து நடித்திருக்கும் படம் இது. கிடைத்த தியேட்டர்களில் சப்தமில்லாமல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்..!

Our Score