full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – மார்ச் 13, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – மார்ச் 13, 2015

இன்று 2015 மார்ச் 13, வெள்ளிக்கிழமையன்று 8 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும், 1 தெலுங்கு டப்பிங் படமும் ரிலீஸாகியுள்ளன.

1. இவனுக்கு தண்ணில கண்டம்

Ivanukku-Thanila-Gandam-Movie-Posters-2

வி.வி.ஆர். சினி மாஸ்க் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் வி.வெங்கட் ராஜ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் பல டிவி சேனல்களில் காம்பியராகவும், பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய தீபக் ஹீரோவாக நடித்திருக்கிறார். நேகா ரத்னாகர் என்னும் மலையாளப் பொண்ணு ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

இவர்களோடு ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், குமாரவேல் , சென்ட்ராயன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், லொள்ளு சபா சுவாமிநாதன்,  பாண்டியராஜன் ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள். ஏ-7 band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். கானா பாலா, யுகபாரதி மற்றும் கண்ணன் பாடல்களை எழுதியுள்ளனர். ஆர்.வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் பல நகைச்சுவைத் தொடர்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த எஸ்.என்.சக்திவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

2. ராஜதந்திரம்

Rajathanthiram-Movie-Posters

Sunland cinemas & white bucket ஆகிய நிறுவனங்கள் இணைந்து Foxstar Studio நிறுவனத்திற்காக தயாரித்திருக்கும் படம் இது.

இதில் வீரா, அஜய் பிரசாத், டொம்புகா சிவா, பட்டியல் சேகர், ரெஜினா கேஸண்ட்ரா, இளவரசு, நரேன், செல்தில் வீராசாமி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சந்தீப் செளதலா பின்னணி இசை அமைத்திருக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவின் ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏ.ஜி.அமிட்.

3. மகாபலிபுரம்

Mahabalipuram-Movie-Posters-1

கிளாப்போர்டு மூவிஸ் தயாரிப்பில் விநாயக் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதில் கருணாகரன், ரமேஷ், வெற்றி, விநாயக், கார்த்திக், விர்த்திகா, அங்கனா, ஜெயக்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இசை – கே, ஒளிப்பதிவு – சந்திரன் பட்டுசாமி, எடிட்டர் – கிம் ஆம், பாடல்கள் – யுகபாரதி, இயக்கம் – டான் சாண்டி.

4. வானவில் வாழ்க்கை

vaanavil-vaazhkai-movie-poster

புதுமுகங்களே அதிகம் நடித்துள்ள படம் இது. மொத்தம் 17 பாடல்கள் உள்ளன. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள படம். ஒஷியானா ஏ.ஜே.ஆர். சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதில் ஜிதின், ஜோஸ் செல்வராஜ், ஜோனத்தான், சாய் சங்கர், கெஸன்ட்ரா, ஜன்னி ராஜன், ஷில்வி ஷாரோன், மாயா, ராதிகா ஜார்ஜ், கானா சிவா, பவித்ரன், டாக்டர் செளம்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ஆர்.கே.பிரதாப், படத்தொகுப்பு – சாபு ஜோஸப். கலை – உமேஷ்குமார். ஆடை வடிவமைப்பு – ஸ்டூடியோ 9696, ஒலி வடிவமைப்பு – சந்தீப்-பிரசாத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் – ஜேம்ஸ் வசந்தன்

5. ஐவராட்டம்

aivaraattam-poster

சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஐவராட்டம்.’

இந்த படத்தில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயப்பிரகாஷின் இரண்டு மகன்கள் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள். நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இருவரும் நடிக்கும் இந்தப் படத்தில் இவர்களது அப்பா ஜெயப்பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் அம்ருத் கலாம் என்பவரும் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக நித்யாஷெட்டி நடித்திருக்கிறார்.

வில்லனாக C.K.செந்தில்குமார் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கிங்காங், மனோகர் ராஜபாண்டி, ஆலன், காசி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   ரவீந்திரநாத் குரு,  இசை   –  சுவாமிநாதன், பாடல்கள்   –   மோகன்ராஜன், கலை   –  மயில் கிரிஷ், நடனம்   –  நந்தா, எடிட்டிங்     –  சூர்யா, தயாரிப்பு மேற்பார்வை  –  கோடை சலீம், தயாரிப்பு   –   C.K.செந்தில்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  மிதுன்மாணிக்கம்

6. கதம் கதம்

Katham-Katham

அப்பு மூவிஸ் சார்பில் ஜி.கார்த்திக் மற்றும் திருமதி ஏ.முஸ்தானி தயாரித்திருக்கிறார்கள். இதில் நட்டி நட்ராஜ், ந்ந்தா, சனம், ஷரிகா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார், இசை – தாஜ்நூர், எழுத்து-இயக்கம் பாபு தூயவன்.

7. சொன்னா போச்சு

Sonna-Pochu-Movie-poster

எய்ம் ஹை கிரியேஷன் சார்பில் பீசியெம் தயாரித்திருக்கும் படம் ‘சொன்னா போச்சு’. இதில் அருண், விஜய், சுரேஷ், அழகு, பெருமாள், கோபிகா, சுமி, ரிச்சா, லட்சுமி ஆகியோர் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளர் பீசியெம் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர் வெங்கடேசன் திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார். மனோபாலா, ஆர்த்தி காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன், இசை – பீசியெம், எடிட்டிங் – பாலு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாய்ராம் இயக்கியிருக்கிறார்.

8. தவறான பாதை

thavarana-paathai-poster

ஏ.எஸ்.எஸ்.வி. அட்ரியர்ட்ஸ் மற்றும் வயலட் கிட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இதில் கதையின் நாயகர்களாக சூர்யதேஜா, நவீன், ஜான்ஸன், லஷ்மன் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகிகளாக சுரபி, ஸ்வாதி, ஸ்ரீலட்சுமி நடிக்கின்றனர். கிரி, நரேஷ், நாகராஜ், ஜித்து ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: கர்ணா, இசை: சாய்மதுகர், பாடல்: தானிபன், எடிட்டிங்: வரப்பிரசாத்ராஜ், வசனம்: சிவா. கதை, திரைக்கதை எழுதி ஸ்ரீஆருன் இயக்குகிறார்.

சங்கராபரணம் (தெலுங்கு டப்பிங் படம்)

sankarabharanam-poster

1978-ல் அதாவது 36 ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கில் வெளியான இந்தப் படத்தினை இப்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். 36 ஆண்டுகளுக்குப் பிறகு மொழி மாற்றம் செய்யப்படும் ஒரே இந்தியப் படம் இந்த ‘சங்கராபரணமா’கத்தான் இருக்கும்.

ஸ்ரீசபகிரிவாசன் மூவிஸ் சார்பில் பி.எஸ்.ஹரிஹரன் மற்றும் டி.பி.செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் இப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்கிறார்கள். டி.என்.ஆர்ட்ஸ் சார்பில் ரத்னம் இதனை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யவிருக்கிறார்.

இந்தப் படத்தில் சோமயாஜூலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, முரளிமோகன், துளசி ஆகியோர் நடித்திருந்தனர். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். இன்னிசை திலகம் கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். ராஜேஷ் மலர்வண்ணன் மற்றும் நாவேந்தன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், மற்றும் எஸ்.ஜானகி பாடியுள்ளனர். கே.விஸ்வநாத் இயக்கியிருக்கிறார்.

பிளாக் அண்ட் ஒயிட் – 3-டி (ஆங்கில டப்பிங்)

 

Our Score