2014, ஜூலை 18 வெள்ளிக்கிழமையான இன்றைக்கு 4 நேரடி தமிழ்ப் படங்களும் 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலீஸாகியிருக்கின்றன.
1. சதுரங்க வேட்டை
நடிகரும், இயக்குநருமான மனோபாலா முதல்முறையாக தனது மனோபாலா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் இது. இதில் நட்டி நட்ராஜ் ஹீரோவாகவும், இஷாரா ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். எடிட்டிங் கதிர். ஹெச்.வினோத் எழுதி இயக்கியிருக்கிறார்.
2. வேலையில்லா பட்டதாரி
தனுஷின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. இதில் தனுஷ் அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதல் முறையாக எழுதி, இயக்கியுள்ளார்.
3. இருக்கு. ஆனா இல்ல
வரம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. விவாந்த், ஈடன், மணீஷாஸ்ரீ, ஆதவன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கிரிஷ் ஏ சந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷமிர் இசையமைத்திருக்கிறார். அஹமத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கே.எம்.சரவணன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
4. தலைகீழ்
மாதா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ரெக்ஸ்ராஜ் இயக்கியிருக்கிறார். ராகேஷ், தேஜமை ஹீரோ, ஹீரோயின்களா நடித்திருக்கின்றனர். ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார்.
5. மெட்ரோ – ஆங்கில டப்பிங் படம்