இன்று 2014, ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை 5 நேரடி தமிழ்ப் படங்களும் 2 ஆங்கில டப்பிங் படங்களும் வெளியாகியுள்ளன.
1. இரும்பு குதிரை
கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் தயாரிப்பில் அதர்வா, பிரியா ஆனந்த், ராய் லஷ்மி நடித்திருக்கும் படம் இது. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய.. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார்.
2. சலீம்
ஸ்ரீகிரீன் புரொடெக்சன்ஸ், ஸ்டூடியோ 9 புரொடெக்சன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது. இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கிறார். அக்சா பர்தசானி ஹீரோயினாக நடித்திருக்கிறார். எம்.சி.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். என்.வி.நிர்மல்குமார் இயக்கியிருக்கிறார்.
3. மேகா
ஜிபி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ஜே.சதீஷ்குமார் வாங்கி வெளியிடுகிறார். அஸ்வின் ஹீரோவாக நடித்திருக்கிறார். சிருஷ்டி, அங்கனா ராய் ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக போடப்பட்ட ‘புத்தம்புது காலை’ பாடல் இந்தப் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4. காதல் 2014
சரவணா பிலிம் மேக்கர் நிறுவுனம் தயாரித்திருக்கும் இப்படத்தை அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் சார்பில் ஆர்.எல்.ஏசுதாஸ் வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
இதில் நாயகனாக ஹரீஷ், நாயகியாக நேகா நடித்திருக்கின்றனர். ‘பாய்ஸ்’ மணிகண்டன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் வில்லனாக வருகிறார். அப்புகுட்டி, ‘பசங்க’ சிவகுமார், வேல்முருகன், கம்பம் மீனா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சுகந்தன். இந்தியா முழுவதும் தற்போது நடந்து வரும் பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
5. புதியதோர் உலகம் செய்வோம்
பிரபல பட விநியோகஸ்தரான நாகராஜன் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தில் புதமுக சிறுவர், சிறுமிகளே அதிகம் நடித்திருக்கிறார்கள். அஜீத், சூர்யேஸ்வர், அனு, யாழினி இதில் முக்கியமானவர்கள். சின்னத்திரை இயக்குநர் பி.நித்யானந்தம் இயக்கியிருக்கிறார். லஞ்சம் வாங்கவும் கூடாது.. கொடுக்கவும் கூடாது என்கிற கொள்கையை பிரச்சாரம் செய்யும்வகையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நல்ல திரைப்படம் இது.
6. தி நவம்பர் மேன் – ஆங்கில டப்பிங் படம்
7. நின்ஜா டர்டின்ஸ் – ஆங்கில டப்பிங் படம்