இன்று 2015 ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி தமிழ்ப் படங்களும் 1 டப்பிங் படமும் வெளியாகியிருக்கின்றன.
1. தனி ஒருவன்
ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கிறார். இதில் ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். அரவிந்த்சாமி இதுவரை நடித்திராத முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தம்பி ராமைய்யா, கணேஷ் வெங்கட்ராமன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வசனம் – சுபா மற்றும் மோகன் ராஜா, இசை – ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு – ராம்ஜி, படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை – வி. செல்வகுமார், நடனம் – பிருந்தா, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா மற்றும் திலிப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிர்வாகம் – S மாரியப்பன், நிர்வாக தயாரிப்பு – SM வெங்கட் மாணிக்கம், தயாரிப்பு – கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ், கல்பாத்தி S சுரேஷ்.
‘ஜெயம்’, ‘சந்தோஷ் சுப்புரமணியம்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ராஜாதான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
2. தாக்க தாக்க
Studio Versatile Media Private Limited நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இதில் விக்ராந்த், உமா பத்மநாபன், போஸ் வெங்கட், நாடோடிகள் கீர்த்தனா, அருள்தாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இசை – ஜேக்ஸ் பிஜோய், பாடல்கள் – கலைக்குமார், இயக்கம் – சஞ்சீவ். இந்தப் படத்தை கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார்.
3. அதிபர்
பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற பட நிறுவனம் சார்பில் T..சரவணன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாகவும் வித்யா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மற்றும் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவை சரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலி முருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதி கண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிலிப்ஸ் விஜயகுமார். இசை – விக்ரம்சிங்கா, பாடல்கள் -நா.முத்துக்குமார், விவேகா, கலை: – M.G.சேகர், நடனம் – சிவசங்கர், தினேஷ், ஸ்டண்ட் – கனல்கண்ணன், எடிட்டிங் – சஷிகுமார், தயாரிப்பு நிர்வாகம் – அஷ்ரப் – ஹக்கீம், இணை தயாரிப்பு – P.B. சரவணன், தயாரிப்பு – T.சிவகுமார். எழுத்து – இயக்கம் – சூர்யபிரகாஷ். (இவர் ஏற்கெனவே ‘மாயி’, ‘திவான்’, ‘மாணிக்கம்’, போன்ற படங்களை இயக்கியவர்.
4. எப்போ சொல்லப் போற
ஸ்ரீமாருதி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜீவன் ஹீரோவாகவும், ஸ்மிருதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ஜே.வேலு இயக்கியிருக்கிறார்.
நோ எஸ்கேப் – ஆங்கில டப்பிங் படம்