full screen background image

வேலையிழப்பினால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘டூ ஓவர்’ திரைப்படம்

வேலையிழப்பினால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘டூ ஓவர்’ திரைப்படம்

ரியல் இமேஜ் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.சரவணன் தயாரித்துள்ள படம் டூ ஓவர்’.

இந்தப் படத்தில் மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா ஆகியோர் நடித்துள்ளனர்.

பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஷார்வி எழுதி இயக்கியுள்ளார்.

ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவனான நாயகன் சிவக்குமார், தான் பார்த்து வந்த வேலையை திடீரென்று இழக்கிறான். சிவா வேலை இழந்ததால் அவனது குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. கணவன், மனைவிக்குள் பிரிவு உண்டாகிறது. தொடர்ந்து, சிவாவின் புதிய வேலை தேடும் படலம்.. அதில் அவன் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்று திரைக்கதையோட்டம் நிகழ்கிறது. இதில் அவன் வெற்றி பெற்றானா..? அவனது குடும்பம் அவனுடன் மீண்டும் இணைந்ததா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெயிலர் வெளியீடு இவைகளெல்லாம் விரைவில் நடைபெறவிருக்கிறது.

 
Our Score