நடிகர் சந்தானத்தின் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சினிஸும் மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் சந்தானம் 3 கேரக்டர்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் அனைகா, ஷிரின் இருவரும் நடித்துள்ளனர்.
படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.
மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நிழல்கள்’ ரவி, சித்ரா லட்சுமணன், ‘மொட்டை’ ராஜேந்திரன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.வி., இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ஜோமின், நடன இயக்கம் – தினேஷ், சண்டை இயக்கம் – சுப்பராயன், பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், சரவெடி சரண், கலை இயக்கம் – ஏ.ராஜேஷ், மக்கள் தொடர்பு – யுவராஜ்.
பல இயக்குநர்களிடத்தில் பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த அறிமுக இயக்குநரான கார்த்திக் யோகி இந்தப் படத்தை இயக்குகிறார்.
மிகப் பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும், மிகச் சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் எகிறியுள்ளது. முழுக்க, முழுக்க பொழுது போக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப் பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.
இன்று வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த படக் குழுவினர் அடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகளைத் துவக்குகிறார்கள்.