தேஜ் நடிப்பில் உருவாகும் ‘துணிந்தவன்’ – சீனாவில் படமாகிறது

தேஜ் நடிப்பில் உருவாகும் ‘துணிந்தவன்’ – சீனாவில் படமாகிறது

‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தேஜ், தொடர்ந்து ‘காந்தம்’, ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணைத் தொடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இதில் ‘மொழிவது யாதெனில்’ படப்பிடிப்பு முடிவடைந்து  தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. ‘விண்ணைத் தொடு’ படத்தின்  படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.

அடுத்ததாக, அதிரடி ஆக்சன் காட்சிகளோடு ‘துணிந்தவன்’ என்ற படத்தில் தேஜ் நாயகனாக நடிக்கிறார் தேஜ்.  எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் கிஷோர் குமார் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் வசந்த் இயக்குகிறார்.

அண்டர்வேல்ட் தாதாக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், திரில்லர் மற்றும் காதல் படமாக உருவாக உள்ளது. இதில் நாயகியாக மதல்ஷா சர்மா நடிக்கிறார். இவர் பரத் நடித்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் நடித்தவர்.  தெலுங்கில் ஐந்து படங்களிலும், இந்தியில் இரண்டு படங்களிலும் இவர் நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக லண்டன் மாடல் அழகி கிமியா நடிக்கிறார்.

இப்படத்தில் குங்பூ ராஜநாயகம்  வில்லனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘ஆனந்தம் ஆரம்பம்’ என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். குங்பூ கலையில் 8 பிளாக் பெல்டுகளை வாங்கியுள்ள ராஜநாயகம், உலகம் முழுவதும் குங்பூ கலையை கற்றுக் கொடுத்து வருகிறார். உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேர் இவரிடம்  குங்பூ பயின்று வருகிறார்கள்.  இத்துடன் சைனிஸ் பாக்சிங்கிலும் தேர்ச்சி பெற்றவரான ராஜநாயகம், இப்படத்தில் பல்வேறு ஆக்ஷன் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.

குங்பூ ராஜநாயகமும், நாயகன் தேஜும் மோதும் சண்டைக் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனா நாட்டு வில்லன் நடிகரான டேனியல் உ என்பவரும் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். குங்பூ சண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் சண்டைக் காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வசந்த் இயக்குகிறார். பிரேம் ஒளிப்பதிவு செய்கிறார். அனூப் இசையமைக்கிறார். எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் கிஷோர் குமார் தயாரிக்கிறார். சீனா, பெங்களூர் மற்றும் சென்னையில் படமாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  விரைவில் தொடங்க உள்ளது.

Our Score