‘தும்பா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

‘தும்பா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

இந்தக் கோடை விடுமுறையில் மிகவும் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக ‘தும்பா’ இடம் பிடித்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே குழந்தைகளின் செல்லமாக மாறிவிட்ட ‘டைக்ரஸ்’ தும்பா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.

ஒளிப்பதிவு – நரேஷ் இளன், படத் தொகுப்பு – கலைவாணன், சண்டை இயக்கம் – ஆக்ஷன்-100 ராம் ராகவ், வசனம் – ஏ.ஆர்.பிரபாகரன், ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், பல்லவி சிங், எழுத்து, இயக்கம் – ஹரிஷ் ராம்.

314A1691

மிக குறுகிய காலத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பதால் ஒட்டு மொத்தக் குழுவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் இது குறித்து கூறும்போது, “தயாரிப்பாளர்களான நாங்கள் இருவரும் எப்போதும் பரஸ்பர ஆர்வத்தை பகிர்ந்து கொள்வது என்பது யதேச்சையாக அமைந்தது.

நாங்கள் இருவருமே பயணக் கதை மற்றும் சாகச அடிப்படையிலான திரைப்படங்களை, குறிப்பாக காடுகளின் பின்னணியில் உருவாகும் படங்களை ரசிப்பவர்கள். இயக்குநர் ஹரிஷ் ராம் எங்களுக்கு கதையை விவரிக்கும்போது, நாங்கள் மிகவும் ரசித்தோம்.

ஆனால் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும்போதுதான், அந்த அடர்ந்த காடுகளில் படம் பிடிக்க ஒட்டு மொத்தக் குழுவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்தோம்.

314A7194

சில இடங்களில், படப்பிடிப்பு நடத்த மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் அதையும் தாண்டி படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

வாகமோன், இடுக்கி, குமுளி, பாலக்காடு, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். திரையரங்குகளில் பார்வையாளர்களால் வெறுமனே படத்தை மட்டும் ரசிக்காமல், இந்த இடங்களின் அழகிய காட்சிகளையும் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது உறுதி” என்றார்.

314A8207

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த படத்தின் அறிமுக வீடியோ மிகப் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘புது சாட்டம்’ பாடல், YouTubeல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. மற்ற பாடல்களுக்கு விவேக் மெர்வின் & சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

K.J.R.ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே.ராஜேஷ் இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடவிருக்கிறார்.

Our Score