full screen background image

சின்னத்திரை நடிகர் தீனா அறிமுகமாகும் ‘தும்பா’ திரைப்படம்…

சின்னத்திரை நடிகர் தீனா அறிமுகமாகும் ‘தும்பா’ திரைப்படம்…

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேகா நியாபதி தயாரிக்கும் திரைப்படம் ‘தும்பா’.

இந்தப் படத்தில் சின்னத்திரை பிரபலமான தீனா நாயகனாக நடிக்கவிருக்கிறார். மற்றும் ‘கனா’ புகழ் தர்ஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோரும் இணைந்து நடிக்கிறார்கள்.

அனிருத், விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இந்த ஃபேண்டஸி அட்வென்சர் படத்துக்கு இசையமைத்துள்ளனர். நரேன் இளன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவாணன் படத் தொகுப்பு செய்துள்ளார். ஹரிஷ் ராம் எழுதி, இயக்கியிருக்கிறார்.

Dheena

இந்தப் படத்தில் நடித்தது பற்றிப் பேசிய நடிகர் தீனா, “இந்த வாய்ப்பு எனக்கு எளிதில் கிடைக்கவில்லை. பயிற்சி பட்டறைக்கு போய் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்கள் நடிப்பு திறமையைப் பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.

ஒன் லைன் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்களின் தலைமுறையில் வளர்ந்தவன் நான். இந்தப் படத்தில் எனக்கு அப்படிப்பட்ட விஷயங்கள் நிறைய உள்ளன. என் கதாபாத்திரத்தின் தன்மை எனக்கு நிறைய காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும் என நான் நம்புகிறேன்…” என்றார் தீனா.

இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை K.J.R. ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே.ராஜேஷ் பெற்றுள்ளார்.

Our Score