full screen background image

‘துலாம்’ திரைப்படத்தை வாழ்த்திய நடிகை சோனியா அகர்வால்..!

‘துலாம்’ திரைப்படத்தை வாழ்த்திய நடிகை சோனியா அகர்வால்..!

வி மூவி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் விகாஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘துலாம்’.

இப்படத்தில் நாயகனாக விவாத், நாயகியாக  ஜெயஸ்ரீ நடித்துள்ளனர். இவர்களுடன் மனோபாலா, சிவா, பொன்னம்பலம், மணிமாறன், அஞ்சலி  மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார்,  இசை – அலெக்ஸ் பிரேம்நாத், படத் தொகுப்பு –  சுரேஷ் அர்ஸ், பாடல்கள் – நா.முத்துக்குமார், கானா பாலா, விஜயகுமார், எழுத்து, இயக்கம் – விஜய் விகாஸ்.

‘துலாம்’ படம் பற்றி இயக்குநர் விஜய் விகாஸ் கூறுகையில் “இந்தப் படம் இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற  கதைக் கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இன்று சட்டம் என்பது எப்படி இருக்கிறது? சமூகத்தில் இன்று அப்பாவிகள் சட்டத்தினால்  எப்படியெல்லாம்  பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்தஸ்தில் உள்ளவர்கள்  சமூகத்தில் பெரும் குற்றங்கள் செய்துவிட்டு எளிதாக அதிலிருந்து எப்படி தப்பித்து கொள்கிறார்கள் என்பதையும் எடுத்துரைக்கிறது..” என்றார்.

IMG_0016

இந்தப் படத்தின் இசை குறுந்தகட்டை நடிகை சோனியா அகர்வால் சமீபத்தில் வெளியிட்டார்.

அப்போது படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்த சோனியா அகர்வால், ‘எங்கு இருந்தாய் நீ எங்கு இருந்தாய்’ என்ற பாடலும், அம்மாவை பற்றிய ‘பெத்த உசுரு ரத்த உசுரு’  என்று தொடங்கும் பாடலை மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னார்.

மேலும்  கானா பாலா பாடிய ‘ஜிகினா ஜிகினா’ என்ற பாடல் அனைவரையும்  குத்து ஆட்டம் போட வைக்கும் என்று கூறி இசையமைப்பாளர் அலெக்ஸ் பிரேம்நாத்தை பாராட்டிய சோனியா அகர்வால், இந்த “துலாம் திரைப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும்” என்றும் வாழ்த்தினார்.

Our Score