full screen background image

விஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’

விஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’

அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம் பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.

இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ்  லலித் குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தாவின் இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.

டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார்.

‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தில்தான் இணைகிறது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றிக் கோட்டைத் தொட தயாராகி வருகிறார்கள்.

தற்போது இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு விஜய் சேதுபதியின் ரசிகர்களையும், சினிமா விரும்பிகளையும் அதிகமாகக் கவர்ந்திழுத்துள்ளது.

Our Score