‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் தலைப்பே தலைப்பு செய்தியான விஷயம். அந்த ஆச்சர்யத்திற்குக் குறைவே இல்லாமல் இதன் படப்பிடிப்பும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாகவும் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய கேரக்டரில் இடையழகி சிம்ரனும் நடிக்கிறார். மேலும் மயில்சாமி, எஸ்.ஜே.சூர்யா, விடிவி கணேஷும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன். படத்தொகுப்பு – ரூபன். கலை இயக்கம் – உமேஷ்குமார். காஸ்ட்யூம் டிஸைனர் – நிரஞ்சனி அகத்தியன், நடனம் – எம்.ஷெரீப், பாடல்கள் – நா.முத்துக்குமார், கபிலன், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ். எழுத்து-இயக்கம் – ஆதிக் ரவிச்சந்திரன்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 16 வியாழக்கிழமையன்று வெளியாகவுள்ளது.
இது பற்றிப் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் சி.ஜே. ஜெயகுமார், “உற்சாகமும் புதுமையும் பொங்கும் இளைஞர்களைப் பற்றிய படம் இது. பூஜை போட்ட நாள் முதல் இன்றுவரை இந்த இளமைக் கூட்டணியின் உற்சாகமும், உழைப்பும் எங்களை வழி நடத்தி வருகிறது.
சோனி மியுசிக் நிறுவனம் எங்கள் படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளது எங்களுக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது.
இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை நினைவுகூறும் வகையில்தான் இந்தப் படத்தின் கதையும் அமைந்துள்ளது. அனைத்து இளைஞர்களும் இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும் என்று உறுதியாக நாங்கள் நம்புகிறோம்…” என்கிறார்.