நாகார்ஜூனா-கார்த்தியின் நடிப்பில் ‘தோழா’ நாளை ரிலீஸ்..!

நாகார்ஜூனா-கார்த்தியின் நடிப்பில் ‘தோழா’ நாளை ரிலீஸ்..!

பி.வி.பி. சினிமாஸ் தயாரித்திருக்கும் புதிய படமான ‘தோழா’ பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நாளை வெளியாகவிருக்கிறது.

'பையா', 'சிறுத்தை' ஆகிய படங்களில் கார்த்திக்கு இணையாக நடித்து அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயரெடுத்த நடிகை தமன்னா, இந்த 'தோழா' படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாகார்ஜுனா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரகாஷ்ராஜ், விவேக், ஜெயசுதா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கோபிசுந்தர் இசை அமைக்க, பி எஸ் வினோத் ஒளிப்பதிவில், பி.வம்சி இயக்கியிருக்கிறார்.

நடப்பின் ஆழம் என்ன என்பதை மனிதக் குலம்  தோன்றிய நாளில் இருந்தே ஆராய்ச்சிகள்கூட கூறாத பதிலை 'தோழா' திரைப்படம் கூறுகிறது.

ஒரு மாற்று திறனாளிக்கும், மன ரீதியாக பெரும் போராட்டத்தில் இருக்கும் ஒருவனுக்கும்  இடையே நடக்கும் போராட்டமே இந்த 'தோழா' திரைப்படத்தின் கதை. நாகார்ஜுனாவும், கார்த்தியும் இணை பிரியாத நண்பர்களாக  நடித்திருக்கிறார்கள்.  

'தோழா' படத்தின் நீளம்தான் நட்பின் ஆழம் என்கிறார்கள்  படக் குழுவினர். இரண்டு மணி நேரம், முப்பத்தி ஐந்து நிமிடம், பதினைந்து வினாடிகள் நீடிக்கும் இந்த 'தோழா', திரைப்படம், குடுமபத்தோடு  சென்று  ரசிக்கும் படமாக இருக்கும்.

படத்தை பார்த்தவர்களின் கருத்துப்படி 'தோழா' நண்பர்கள் உள்ளவர்களுக்கும், நட்புக்கு ஏங்குபவர்களுக்கு  மட்டுமே என்பதுதான். ஆகவே இந்தப் படம் சகல வயதினருக்கும் ஏற்றப் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எல்லாரையும்  கவரும் வண்ணம் படமாக்கபட்டுள்ள 'தோழா'  திரைப்படத்துக்கு கிடைத்துள்ள வரி விலக்கு  இந்தப் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.