full screen background image

நவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம் 

நவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம் 

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எம்.பி.முகம்மது அலி தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தெளலத்’.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் ஷக்தி சிவன். இவர் ஏற்கனவே ‘கோட்டி’, ‘ஆண்டவப் பெருமாள்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அத்துடன் ‘பணவாசி’ என்ற கன்னட படம் ஒன்றிலும் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஜான்வி நடித்திருக்கிறார்.

மற்றும், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், ஐசக், யோகிபாபு, வைரவன், அஜெய்பிரபு, ஏ.கே.எஸ், சலா, விஜய் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மெய்யப்பன்.எஸ், இசை – A.P.இமாலயன், பாடல்கள் – கானாபாலா, இளையராஜா, சண்டை இயக்கம் – ஆக்ஷன் பிரகாஷ், படத் தொகுப்பு – அருண் துரைராஜ், தயாரிப்பு நிர்வாகம் – போஸ், தயாரிப்பு – M.B.முகமதுஅலி, M.சசிகலா.

‘தௌலத்’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் பேசும்போது, “என்னுடைய ரைட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களை விநியோகித்துள்ளேன். 

அந்த அனுபவத்தில்தான் தற்போது “தௌலத்” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளேன்.

எதிர்கால உலகையே பயமுறுத்தும் அதி நவீன ஆயுதமான போதை மருந்து கடத்தலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. தௌலத், அலெக்ஸ் என்ற இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிதான் கதை..!

தங்கத்தைவிட உயர்ந்த விலை கொண்ட போதை பொருள் பெங்களூர் வழியாக சென்னைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எப்படி கடத்தப்படுகிறது என்பதை ஆக்சன் படமாக உருவாக்கி உள்ளோம்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களால் கணிக்க முடியாத அளவிற்கு பல்வேறு திருப்பங்களுடன் மிரட்டலாக அமைந்துள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத அளவில் கதை நகரும்படி இப்படத்தின் படத் தொகுப்பு வேகத்தை கூட்டியுள்ளது. திரைக்கதையின் விறுவிறுபிற்கேற்ப அமைந்துள்ள பின்னணி இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு.

எந்த ஒரு பிரம்மாண்டத்திற்கும் துவக்கம் சிறியதே. அப்படி சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு,  சிறப்பாக வளர்ந்து ஒரு தரமான ஆக்‌ஷன் திரைப்படமாக வந்துள்ளது. யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது.

படப்பிடிப்பு பெங்களூர், சென்னை, ஊட்டி மற்றும் கர்நாடகாவின் சிரிசி என்ற இடத்திலும் நடைபெற்றுள்ளது.

இண்டெர்நேஷனல் தரத்தில் முழு நீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சென்சாரில் U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் 27-ம் தேதி  இத்திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. முழு நீள கமர்ஷியல் படமான இப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

விநியோகஸ்தராக பெயர் பெற்ற எனக்கு, இந்த ‘தௌலத்’ திரைப்படத்தின் மூலம் நல்ல தயாரிப்பாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

Our Score