திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..!

திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..!

கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தூங்கா கண்கள்.’

இந்தப் படத்தில் ‘கைதி’ படத்தில் நடித்த நடிகர் ஜார்ஜின் மகன் பிரிட்டோ நாயகனாக அறிமுகமாகிறார். ஜார்ஜூம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ‘களவாணி’ துரை சுதாகர், நிக்கேஷ், ‘ஹலோ’ கந்தசாமி, காஞ்சனா ரமேஷ், டாக்டர் பிரபு, இயக்குநர் த.வினு ஆகியோருடன் அப்ஷரா, ரேஷ்மா என்ற இரண்டு நாயகிகளும் அறிமுகமாகிறார்கள்.

KW9A9632

ஒளிப்பதிவு – இமயவன், இசை – இளங்கோ கலைவாணன், பாடல்கள் – நிமேஷ், படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், சண்டை இயக்கம் – திரில்லர் முமேஷ், மக்கள் தொடர்பு – ராஜ்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – த.வினு.

70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படயாக வைத்து இந்த ‘தூங்கா கண்கள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவரையிலும் எந்தவொரு தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

KW9A9392

இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் கலந்து இந்த ‘தூங்க கண்கள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Our Score