திருட்டு ரயிலில் ஏறி வரும் ஹீரோக்கள்..!

திருட்டு ரயிலில் ஏறி வரும் ஹீரோக்கள்..!

SSS மூவிஸ் சார்பில் A.S.T.சலிம் மற்றும் அனு மூவிஸ் சார்பில் P.ரவிக்குமார் இணைந்து தயாரிக்கும் புதிய படம்  ‘திருட்டு ரயில்.’

இதில் ரக்சன், சரண் செல்வம் ஆகிய இரண்டு ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள். கேத்தி என்ற புதுமுகம் ஹீரோயின். மேலும் சென்றாயன், ரவிக்குமார், பிரசாந்த், பாலாஜி, ஷண்முகராஜன், இமான் அண்ணாச்சி, மயில்சாமி, பசங்க சிவக்குமார், பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : விஜயசெல்வன்

இசை : ஜெயபிரகாஷ்

பாடல்கள் : காமகோடியன்

எடிட்டிங் : மாரிஸ்

கலை : ஆரோக்கியராஜ்

நடனம் : தினா, சதீஷ்

சண்டை பயிற்சி – கில்லி சேகர்

எழுத்து – இயக்கம் – திருப்பதி

ஊரில் ஐந்து இளைஞர்களுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதைச் சமாளிக்க முடியாமல் அந்த ஐந்து பேரும் ரயிலில் சென்னைக்குத் தப்பிச்  செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். சென்னையில் இறங்கிய பின் அதைவிட பெரிய பிரச்சனையொன்று அவர்களுக்காகக் காத்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா.. இல்லையா… என்பதுதான் கதை.

Our Score