பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது.
ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப் படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.
தேவர் கதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளரான ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இஸ்லாமியரான இவர் இந்தப் படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ ஆகிய விஜயகாந்த் நடித்த வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.
மறைந்த பிரபல நடிகரும், பசும்பொன் தேவருடன் இணைந்து பயணித்தவருமான லட்சிய நடிகர் எஸ்.எஸ்..ராஜேந்திரனின் மகன் S.S.R.கண்ணன் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணை வகித்துள்ளார்.
இயக்கம் – ஆர்.அரவிந்தராஜ், இசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – அகிலன், படத் தொகுப்பு – சரவணன்-சூரஜ் பிரகாஷ், கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை, ஒப்பனை – வீரா சேகர், ஆடை வடிவமைப்பு – செல்வம்-வீரபாரதி, தயாரிப்பு நிர்வாகி – M.சேதுபாண்டியன்.