வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் P.G.முத்தையாவின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேஜாவு’.
இப்படத்தில் அருள்நிதி நாயகனாகவும் ஸ்முருதி வெங்கட் நாயகியாவும் நடித்துள்ளனர். மேலும், மதுபாலா, அச்சுத் குமார், ராகவ் விஜய், சேத்தன். ‘மைம்’ கோபி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு P.G.முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, அருள் E.சித்தார்த் படத் தொகுப்பை கையாண்டு வருகிறார். பிரதீப் தினேஷ் சண்டை பயிற்சியாளராகவும், வினோத் ரவீந்திரன் கலை இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது.

தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறவிருக்கிறது.