full screen background image

அர்ஜூன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ திரைப்படம்

அர்ஜூன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ திரைப்படம்

G.S.ARTS நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.அருள் குமார் தயாரிப்பில் தினேஷ்  லக்ஷ்மணன்  இயக்கத்தில்,  ஆக்‌ஷன் கிங் அர்ஜீன்,  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  உருவாகும், க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ஒரு வழியாகப் பெயர் வைத்து முடித்துவிட்டார்கள்.

படத்திற்கு தீயவர்கள் குலைகள் நடுங்க’ என்று வித்தியாசமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், ராம்குமார் சிவாஜிகணேசன், G.K.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் பல முக்கிய  பிரபலங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – பரத் ஆசீவகன், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு, கலை இயக்கம் – அருண் சங்கர் துரை, சண்டை இயக்கம் – விக்கி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, எழுத்து, இயக்கம் – தினேஷ் லக்ஷ்மணன்.

இது ஒரு க்ரைம் – த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை.  இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை  மையமாக கொண்டு உருவாகும்  திரைப்படம் ஆகும்.

மன இறுக்கம் கொண்ட  ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. எந்தவித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்  இந்தப் படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார்.

ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் திரில்லர் அனுபவமாக தீயவர் குலைகள் நடுங்க’ திரைப்படம் உருவாகியுள்ளது.

தற்போது இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 
Our Score