அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டபொழுது போக்கு நிறுவனமான எமோஷனல் எண்டர்டெயின்மெண்ட்நெட்வொர்க் நிறுவனம் theatrehoods.com என்ற பெயரில் புதிய ஓடிடி தளத்தை வரும் ஜனவரி 15-ம் தேதியன்று இந்தியா மற்றும் உலக அளவில் வெளியிடுகிறது.
இது சினிமா தியேட்டர் மற்றும் ஓ.டி.டி. இரண்டும் இணைந்த நிலையில் செயல்படவுள்ளது.
அனைத்து இந்திய பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் திரைப்படங்கள், தொடர்கள், டி.வி.நிகழ்ச்சிகள், இசை போன்ற உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் கண்டு மகிழலாம்.
திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான இலவச டிக்கெட்டுகளையும், அவர்களின் ஓ.டி.டி. இயங்குதளத்தில் வரம்பற்ற உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தையும் பெறப் போகிறார்கள்.
இந்த நிறுவனத்தின் இந்திய பிராந்திய சந்தைபடுத்துதல் பற்றி இதன் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், ”இந்திய சினிமா ஆர்வலர்களை நாங்கள் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். நமது சினிமாக்களை பற்றி நான் பெருமைப்படுகிறேன். அது நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அது நம் உணர்வுடன் கலந்திருக்கிறது.

எங்களது ஓ.டி.டி. இணையதளத்தில் பயனாளர்களுக்கு ஒவ்வொரு கணமும் சுவாரஸ்யமாக்குவதை எங்கள் முதன்மையான குறிக்கோளாக கொண்டுள்ளோம். நாங்கள் உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை வழங்குகிறோம்.
ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பிராந்திய மொழிகள் உள்ளடக்க நூலகத்தையும் , ஆயிரம் அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களையும் உருவாக்கி வருகிறோம்.
இப்பொழுது மிகக் குறைவான திரைப்படங்களே ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக திரையிடப்படுகின்றன. மேலும் பெரிய படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சினிமா ரசிகர்கள் ஓ.டி.டி.யில் படங்களை பார்க்க 30 முதல் 45 நாட்கள்வரை காத்திருக்கிறார்கள். மேலும் சினிமா தியேட்டர் அனுபவங்கள் வித்தியாசமானவை. இந்த கிடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவில் திரையாங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான, இலவச டிக்கட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வரம்பற்ற உள்ளடக்கத்தை பார்க்கும் அனுபவத்தையும் இணைத்து வழங்குகிறோம்.
இது இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மொபைல் ஆப்களில் உலகம் முழுவதும் கிடைக்கவுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், உள்ளடக்க படைப்பாளர்களை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மில்லியன் கணக்கான சினிமா ரசிகர்களை கவரும் வண்ணம் அவர்கள் எதிர்பார்க்கும் திரைப்படங்களின் விளம்பரங்களை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்…” என்றார்.
Emotional entertainment network
Contact no : 7904221927









