full screen background image

‘தி வாரியர்’ படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி..!

‘தி வாரியர்’ படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி..!

தி வாரியர்’ திரைப்படத்தில் நடிகர் ஆதியின் பயமுறுத்தும் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது..!

Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான ராம் பொத்தினேனி இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நடிகர் ஆதி பினுஷெட்டி இதுவரை பார்த்திராத வலுவான வில்லன் வேடத்தில் நடிக்கின்றார்.

படத்தில் ‘குரு’ என்ற கதாபாத்திரத்தில் தீய செயல்களுக்கே தலைவனாக இருக்கும் ஒரு மிரட்டலான பாத்திரத்தில் நடிக்கிறார் ஆதி.

கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக விசில்’ மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்குகிறார்.        ஆக்‌ஷன் கமர்ஷியல் படங்களுக்காக புகழ் பெற்ற இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம், இரு மொழிகளில் தயாராவதுடன், கோலிவுட்டில் ராமின் அறிமுக படமும் இதுவாகும்.

‘சீடிமார்’ திரைப்பட வெற்றிக்கு பிறகு, Srinivasaa Silver Screen நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த ‘தி வாரியர்’ திரைப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த தி வாரியர்’ படத்தில் ஆதியின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தை இந்தப் படக் குழு வெளியிட்டுள்ளது. அவரது கடுமையான தோற்றம் மற்றும் மிரட்டும் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

 
Our Score